Watch Video : "தமிழன்டா எந்நாளும்..!" : தினேஷ் கார்த்திக்கை கவுரவப்படுத்திய இந்திய அணி..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்ற கோப்பையை தினேஷ் கார்த்திக்கிடம் அளித்து இந்திய அணியினர் கவுரவப்படுத்தியுள்ளனர்.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆசிய கோப்பையை இழந்த இந்திய அணி இந்த வெற்றி மூலம் உற்சாகம் அடைந்துள்ளது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தொடரை வென்றதற்கான கோப்பையை இந்திய கேப்டன் ரோகித்சர்மா பெற்ற பிறகு, கோப்பையை வென்றதற்கான அணி புகைப்படத்தின்போது ரோகித்சர்மாவும், இந்திய அணியினரும் கோப்பையை தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர். இந்த கோப்பையை மேலே தூக்கிப் பிடித்து வெற்றி பெற்றதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தினர். ஆனால், தினேஷ் கார்த்திக் சிரிப்புடன் மறுத்தார்.
Winners Are Grinners! ☺️ ☺️
— BCCI (@BCCI) September 25, 2022
That moment when #TeamIndia Captain @ImRo45 received the #INDvAUS @mastercardindia T20I series trophy 🏆 from the hands of Mr. @ThakurArunS, Treasurer, BCCI. 👏 👏 pic.twitter.com/nr31xBrRBQ
ஆனாலும், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்கள் தினேஷ் கார்த்திக்கையே கோப்பையுடன் போஸ் கொடுக்குமாறு வலியுறுத்தினர். அணியின் மிகவும் மூத்த வீரர் என்ற பெருமைக்குரிய தினேஷ் கார்த்திக்கும், தொடரை வென்றதற்கான அணி புகைப்படத்திற்கு கோப்பையுடன் கம்பீரமாக காட்சி தந்தார்.
இந்திய அணிக்காக சுமார் 18 ஆண்டுகளாக ஆடி வரும் தினேஷ் கார்த்திக்கை கவுரவப்படுத்தும் விதமாக, அவரிடம் இந்திய அணியினர் தொடரை வென்ற கோப்பையை அளித்துள்ளனர். தினேஷ் கார்த்திக்கை கவுரப்படுத்திய இந்திய அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் சிக்ஸரும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் அடித்து இந்திய அணியை தினேஷ் கார்த்திக் வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

37 வயதான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக இதுவரை 53 டி20 போட்டிகளில் ஆடி 609 ரன்களை எடுத்துள்ளார். 1 அரைசதம் விளாசியுள்ளார். 94 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9 அரைசதங்களுடன் 1752 ரன்களை விளாசியுள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 7 அரைசதங்களுடன் 1025 ரன்களை விளாசியுள்ளார். இந்திய அணிக்காக 2004ம் ஆண்டு முதல் தினேஷ் கார்த்திக் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். போட்டிகளில் தற்போது பெங்களூர் அணிக்காக ஆடி வரும் தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணிக்கு கேப்டனாக ஆடியிருக்கிறார். 229 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 20 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 376 ரன்களை விளாசியுள்ளார்.
மேலும் படிக்க : Watch video : வேற வெலவ் செலிபிரேஷன்..! படிக்கட்டிலே வெற்றியை கொண்டாடிய கோலி - ரோகித்..!




















