மேலும் அறிய

Ranji Trophy Match Fees: அட்ரா சக்க..! ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கும் போனஸ் - பிசிசிஐ போடும் அட்டகாசமான திட்டம்

Ranji Trophy Match Fees: ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ranji Trophy Match Fees: ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது நாள் ஒன்றிற்கு 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை பிசிசிஐ ஊதியம் வழங்குகிறது.

ரஞ்சி வீரர்களுக்கு ஊதியம் உயர்வு?

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியான நிலையில், ரஞ்சி டிராபியில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதற்கான திட்டத்தை இந்திய கிரிக்கெட் சம்மேளனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் முதன்மையான உள்நாட்டு ரெட்-பால் கிரிக்கெட் போட்டியாக ரஞ்சி கோப்பை கருதப்படுகிறது. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை விட அதிகம் பணம் புரளும்,  இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க வீரர்கள் அதிகம் ஆர்வம் காட்டும் போக்கைக் கட்டுப்படுத்த பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுப்பதாக கூறப்படுகிறது.

பிசிசிஐ-யின் திட்டம் என்ன?

புதிய ஊதிய திட்டம் தொடர்பாக பேசிய பிசிசிஐ அதிகாரி, “டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டத்திற்குப் பிறகு, ரெட்-பால் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டை விளையாடும் வீரர்களுக்கு எப்படி வெகுமதி அளிக்கலாம் என்பதை பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. ரெட் பால் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் போட்டிக் கட்டணத்தை அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஊதிய விவரங்கள்:

அண்மையில் வெளியான அறிவிப்பின்படி,  டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டத்தின் கீழ், ஒரு டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் ரூ. 15-லட்சம் போட்டிக் கட்டணத்துடன் சேர்த்து, அதிகபட்சமாக ரூ.45 லட்சம் ஊக்கத்தொகையாக பெற வழிவகை செய்யப்படுகிறது. ரஞ்சிக்காக போட்டிகளுக்கு தற்போது போட்டிக் கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ 40,000 முதல் ரூ 60,000 வரை பிசிசிஐ வழங்குகிறது. 

ஒரு வீரர் ஒரு சீசனில் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறார் என்பதை பொறுத்து இந்த ஊதியம் மாறும். உதாரணமாக, ஒரு ஆண்டில் ஏழு குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலும் விளையாடினால், அவர் ஆண்டுக்கு சுமார் ரூ.11.2 லட்சத்தை ஊதியமாக பெறுவார். இது,  வெறும் இரண்டு மாதங்களே நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான அடிப்படைத் தொகையான 20 லட்சத்தை விட குறைவாகும்.

ரஞ்சி போட்டியை தவிர்க்கும் வீரர்கள்:

ஐபிஎல் ஒப்பந்தங்களைக் கொண்ட பல வீரர்கள் அண்மைக்காலமாக ரஞ்சி டிராபி போட்டிகளை தவிர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருவேளை காயம் ஏற்பட்டு,  அதிக வருவாய் வழங்கும்  ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் சூழலை தவிர்க்க ரஞ்சி போட்டிகளை இளம் வீரர்கள் தவிர்ப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஒப்பந்தமாகியுள்ள 165 இந்திய கிரிக்கெட் வீரர்களில், 56 பேர் ரஞ்சி சீசனில் மாநில அணிகளின் ரேடாரில் இருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.  25 பேர் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget