Mufasa OTT Release: 'முஃபாசா தி லயன் கிங்’ - ஓ.டி.டி. வெளியீடு - எப்போது தெரியுமா?
Mufasa The Lion King OTT Release Date: ’முஃபாசா: தி லயன் கிங்’ ஓ.டி.டி. வெளியீடு பற்றிய அறிவிப்பை காணலாம்.

பிரபலமான ’முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
1994-ஆம் ஆண்டு 2-டி அனிமேஷன் வடிவில்தான் முதன் முதலில் வெளியான படம் ‘தி லயன் கிங்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற Hakuna Matata (கவலையேதுமில்லை) என்ற வார்த்தை எல்லாருக்கும் ஃபேவரைட் ஆக மாறியது. ஆண்டுகள் பல கடந்தாலும் ஸ்கார், ‘ஸ்கார்’ , சிம்பா, முஃபாசா என இந்தப் படம் தரும் அனுபத்தை மறந்துவிட முடியாது. 2019 ஆம் ஆண்டில் 3-டி வடிவில் தயாரிக்கப்பட்டு தி லயன் கிங் படம் வெளியானது.
முஃபாசாவின் கதை
தி லயன் கிங் படத்தில் சிம்பாவின் ஹீரோவாக வந்த முஃபாசாவின் கதையை வைத்து ’முஃபாசா: தி லயன் கிங் படம் 2024-ம் ஆண்டில் வெளியானது. தி லயன் கிங் படத்தின் Prequel-யாக(முன்கதை) இடம்பெற்றுள்ளது இதில், முஃபாசா காட்டு ராஜாவாக உயர்ந்தது எப்படி? அவனுக்கு எதிரியாக ஸ்கார் உருமாறிது ஏன்? உள்ளிட்ட கதைகள் ஏற்பட்டது. முஃபாசா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தாய், தந்தையுடன் வளர்ந்து வரும் முஃபாசா எதிர்பாரா துயரால் அவன் வசித்த இடத்தை விட்டு வெறொரு இடத்திற்கு செல்கிறான்.பல இடர்களுக்குப் பிறகு அவர் இடத்தை கண்டடைகிறானா என்பதே கதை. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. வசூல் ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. இருப்பினும், தி லயன் கிங் படம் போன்று இல்லை எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
It's time to experience the legend of Mufasa.#Mufasa: The Lion King, coming to #JioHotstar on March 26 in English, Hindi, Tamil and Telugu. #MufasaOnJioHotstar #JioHotstar #InfinitePossibilities pic.twitter.com/IqN5AxEucR
— JioHotstar (@JioHotstar) March 12, 2025
ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு:
முஃபாசா: தி லயன் கிங் தமிழ், இந்தி, தெலுங்கு ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஜியோஹார்ட்ஸ்டாரில் வரும் 26-ம் தேதி வெளியாகிறது.
தமிழில் அர்ஜுன் தாஸ், நாசர். மற்ற மொழிகளில் ஷாருக்கான், மகேஷ் பாபு போன்ற சூப்பர் ஸ்டார்களின் குரலை பயன்படுத்தியிருக்கிறது டிஸ்னி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

