"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றுவோம் என சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் என கூறி உரையை தொடங்கினார். பின்னர், அழைப்பை ஏற்று விருந்துக்கு வந்த இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்தார். மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றுவோம் என்றும் அவர் கூறினார்.
ரமலான் மாதம்:
ஒவ்வொரு ஆண்டும், இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் அல்லது ஹிஜ்ரியில், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பிரார்த்தனை மற்றும் நோன்பு மாதமாகக் கடைப்பிடிக்கின்றனர். இந்த நிலையில், ரமலான் 2025 கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது.
அரசியல் கட்சிகள் சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: Vijay: இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய்.! டாப் 10 புகைப்படங்கள்.!
இஃப்தார் நோன்பு திறந்த விஜய்:
இதில், பங்கேற்பதற்காக தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்த விஜய், 3000 இஸ்லாமியர்களுடன் இணைந்து இஃப்தார் விருந்து உணவு உண்டார். பின்னர், அங்கு கூடியிருந்த இஸ்லாமியர்கள் மத்தியில் பேசிய அவர், நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் என கூறி உரையை தொடங்கினார்.
#WATCH | Tamilaga Vettri Kazhagam founder and chief Vijay hosts 'Iftar' during Ramzan month, in Chennai pic.twitter.com/tmxP95wEME
— ANI (@ANI) March 7, 2025
மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றுவோம் என்றும் அழைப்பை ஏற்று விருந்துக்கு வந்த இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தவெகவினரும் விஜய் ரசிகர்களும் ஒய்எம்சிஏ மைதானத்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதை மீறி பலர் ஒய்எம்சிஏ மைதானத்தில் நுழைந்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிக்க: Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...





















