Harry brook ipl 2025 : ஐபிஎல் தொடரிலிருந்து கடைசி நேர விலகல்! இங்கிலாந்து வீரருக்கு 2 ஆண்டுகள் தடை.. பிசிசிஐ அதிரடி
Harry brook : ஹாரி புருக்கை டெல்லி கேபிடல்ஸ் அணி 6.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது, தனது விலகல் குறித்து விளக்கமளித்திருந்த நிலையில் பிசிசிஐ இரண்டு ஆண்டுகள் ஐபிஎல்லில் பங்கேற்க தடை விதித்தது.

2025 ஐபிஎல்-ல் இருந்து கடைசி நிமிடத்தில் விலகியதைத் தொடர்ந்து, இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து இரண்டு சீசன்களுக்கு விளையாட தடை செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025:
18வது ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது, இதற்காக அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை மேற்க்கொண்டு வருகின்றன், வெளிநாட்டு வீரர்களும் ஒருவர் ஒருவராக தங்களது ஐபிஎல் அணிகளுடன் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி அணிக்காக ஓப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கடைசி நேரத்தில்அறிவித்தார்.
இதையும் படிங்க: CSK: தோனி செய்த மேஜிக்... மற்ற அணிகளை விட சென்னை அணி ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?
ஏன் விலகல்?
ஹாரி புருக்கை டெல்லி கேபிடல்ஸ் அணி 6.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது, தனது விலகல் குறித்து விளக்கமளித்த புரூக் "வரவிருக்கும் ஐபிஎல்லில் இருந்து விலகுவது என்ற மிகக் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். டெல்லி கேபிடல்ஸ் அணியிடமும் அவர்களின் ஆதரவாளர்களிடமும் நான் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்".
"வரவிருக்கும் ஐபிஎல்லில் இருந்து விலகுவது என்ற மிகக் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். டெல்லி கேபிடல்ஸ் அணியிடமும் அவர்களின் ஆதரவாளர்களிடமும் நான் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று புரூக் சமூக ஊடகங்களில் எழுதினார்.
"இது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான நேரம், வரவிருக்கும் தொடருக்குத் தயாராவதற்கு நான் முழுமையாக அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
"இதைச் செய்ய, இதுவரை எனது வாழ்க்கையில் மிகவும் பரபரப்பான காலத்திற்குப் பிறகு மீண்டும் உற்சாகமடைய எனக்கு நேரம் தேவை. எல்லோரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும், அவர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் நான் சரியானது என்று நம்புவதைச் செய்ய வேண்டும், மேலும் எனது நாட்டிற்காக விளையாடுவது எனது முன்னுரிமையாகவும் கவனமாகவும் உள்ளது." என்றார்.
பிசிசிஐ அதிரடி:
தற்போது நடமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஐபிஎல் விதிகளின் "ஏலத்தில் பதிவுசெய்து, தேர்வு செய்யப்பட்ட பிறகு, சீசன் தொடங்குவதற்கு முன்பு விளையாட முடியாமல் தொடரில் இருந்து வெளியேறும் எந்தவொரு வீரரும், 2 சீசன்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட மற்றும் ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படுவார்." என்று விதி அமலில் உள்ளது.
இதனால் ஹாரி புரூக் அடுத்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது, இதனை பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும், ஹாரி புரூக்கிடம் அதிகாரப்பூர்வ தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இது ஐபிஎல் கமிட்டியால் நிர்ணயிக்கப்பட்ட விதியாகும், மேலும் ஒவ்வொரு வீரரும் அதற்குக் கடமைப்பட்டிருக்க வேண்டும்," என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த:
ஜூன் மாதம் இங்கிலாந்து இந்தியா மோதும் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது, அதைத் தொடர்ந்து நவம்பர் முதல் ஜனவரி வரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஷஸ் தொடர் நடைபெற உள்ளது, இதில் கவனம் செலுத்தவே புரூக் விலகியுள்ளார். மேலும் கடந்த நாட்களாகவே இங்கிலாந்து அணி சொதப்பி நிலையில் புரூக் நாட்டுக்காக சிறப்பாக விளையாட முயற்சி எடுக்கப்போவதாகவும் கூறினார்.





















