CSK: தோனி செய்த மேஜிக்... மற்ற அணிகளை விட சென்னை அணி ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?
Chennai Super Kings:சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை தோனி எடுத்த சில முக்கியமான முடிவுகளை குறித்து இங்கு காணலாம்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் கேப்டன்சி என்ற சொல்லாம், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை தோனி எடுத்த சில முக்கியமான முடிவுகளை குறித்து இங்கு காணலாம்.
மைக் ஹசி-முரளி விஜய்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரியப் பலம் என்றால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தான், அதிலும் முக்கியமாக மைக் ஹசி முரளி தொடக்க ஜோடியை சென்னை அணியால் என்று மறக்க முடியாது, மேத்யூ ஹைடன் ஓய்வு பெற்ற பிறகு, ஓப்பனராக யார் களமிறங்குவார் என்று எதிர்ப்பாத்திருந்த போது மிடில் வரிசையில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசியை ஓப்பனராக களமிறக்கினார் எம்.எஸ் தோனி, அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. 2011 ஆம் ஆண்டில் சென்னை அணி வெற்றி பெற இந்த தொடக்க ஜோடி மிக முக்கிய காரணமாக இருந்தது.
ஆல்பி மோர்கல்:
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆல் ரவுண்டரான ஆல்பி மோர்கலை சரியாக பயன்படுத்திய அணி சென்னை அணி தான், பவர் பிளே ஓவர்கள், டெத் ஓவர்கள் என அனைத்து இடத்திலும் மோர்கலை தோனி சரியாக பயன்ப்படுத்தினார். இது மட்டுமில்லாமல் ஒரு ஃபினிஷ்சராகவும் மோர்கல சென்னை அணிக்கு இருந்தார், ஆனால் மற்ற அணிகளுக்கு மோர்கல் சென்ற போது அவரால் இதே அளவான ஆட்டத்தை வெளிப்படுத்துவதறகான வாய்ப்புகள் தரப்படவில்லை, இன்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் மோர்கல் உள்ளார்.
ஷிவம் துபே:
துபே என்ற வீரரை கிண்டலடித்த காலம் உண்டு, ஆனால் இன்று இந்திய டி20 அணியின் மிடில் ஆர்டர் வேங்கையாக ஷிவம் துபே உள்ளார், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளில் ஷிவம் துபே விளையாடினாலும் அவரின் பலத்தை கண்டறிந்தவர் எம்.எஸ் தோனி, இவரை 2022 ஆம் ஆண்டு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை அணிக்கு மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஷிவம் துபே சிக்சர் துபேவாக மாறி 2023 ஆம் ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக இருந்தார்.
அஷ்வின் - ஜடேஜா காம்போ:
ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரையும் சேர்ந்து பந்துவீச வைத்து எதிரணிகளுக்கு ஸ்பின் சோக் செய்து காலி செய்வதை ஆரம்பித்தனர், அன்று ஆரம்பித்த இந்த இந்திய அணியிலும் பிரதிபலித்தது, மேலும் சேப்பாக்கம் சென்னை அணியின் கோட்டையாக மாறியதற்கு இவர்களும் முக்கிய காரணமாக இருந்ததார்.
சேஸிங் கிங்ஸ்:
சென்னை அணியை எடுத்துக்கொண்டால் ஒரு போட்டியை கடைசி வரை எடுத்துச்சென்று முடிப்பதில் வல்லவர்கள், கடின இலக்குகளை பகுதியாக பிரித்து அதை சேஸ் செய்துக்காட்டுவார்கள், தோனி, பிரவொ, ஜடேஜா, மோர்கல் போன்ற வீரர்கள் சென்னை அணிக்காக பல போட்டிகளை முடித்துக்காட்டியுள்ளனர். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று சொல்லாம்.
இதுமட்டுமில்லாமல் சென்னை அணி எப்போதும் ஒரு அணியுடனே களமிறங்கும், அது எந்த மைதானமாக இருந்தாலும் சரி ஒரே அணியுடன் தான் களமிறங்கும், இது அந்த குறிப்பிட்ட வீரருக்கும் சரி அணிக்கும் சரி நல்ல நம்பிக்கையாக அமையும். இது தான் அவர்களை ஐபிஎல்-லின் மிகச்சிறந்த அணிகளுள் ஒன்றாக வைத்துள்ளது.





















