Summer Holiday 2025: ஐ ஜாலி.. 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு விடுமுறை எப்போ? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Tamil Nadu School Summer Holidays 2025: 1முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22 முதலாகவும், 6 முதல் 9ஆம் வகுப்பு வரை ஏப்.25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்க உள்ளது.

தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22 ஆம் தேதி முதலாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முழு ஆண்டுத் தேர்வு எப்போது?
தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.9 முதல் 21 ஆம் தேதி வரை காலை வேளையில் முழு ஆண்டு தேர்வு நடைபெறும்.
மேலும் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.8 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மதிய வேளையில் தேர்வு நடைபெற உள்ளது என தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கோடை விடுமுறை எப்படி?
தொடர்ந்து தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.22 ஆம் தேதி முதலாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நிலவரம்
கடந்த 2024ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகை மற்றும் மக்களவைத் தேர்தல் பணிகள் காரணமாக ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. அடுத்த நாளான ஏப்ரல் 24-ல் இருந்து மீண்டும் கோடை விடுமுறை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

