'குட் பேட் அக்லீ' படத்தில் ஷாலினி மட்டும் இல்ல... மன்மதனும் இருக்காரா? கொண்டாட தயாரா ஃபேன்ஸ்!
'குட் பேட் அக்லீ' படத்தில் அஜித் மனைவி ஷாலினி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், மற்றொரு டாப் நடிகரும் கேமியோ ரோலில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில், ரூ.137 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. ரசிகர்களிடையே பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத இந்தப் படத்திற்கு பிறகு... அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லீ படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்தப் படத்தில் அஜித் வேதாளம், தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்களின் கெட்டப்புகளின் வருகிறார் என்பது டீசரை பார்த்த போதே தெரிந்தது. மேலும் அஜித் உடன் இணைந்து த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. ரூ.270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. மேலும், குட் பேட் அக்லீ டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 32 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது.
வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லீ படம் திரைக்கு வர உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் குட் பேட் அக்லீ வெளியாகிறது. அஜித் நடிப்பில் இந்த ஆண்டு திரைக்கு வரும் 2ஆவது இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் சிம்பு ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
இந்த படத்தில் அஜித் ஒரு கேங் ஸ்டாராக நடித்துள்ளது, சிம்புவின் கதாபாத்திரம் கிட்ட தட்ட ரோலக்ஸ் கதாபாத்திரத்ததிற்கு இணையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டு படம் ரிலீசுக்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படியொரு தகவல் வெளியாகி உள்ளது இந்த தகவல் அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி சிம்பு ரசிகர்கள் மத்தியிலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

