JEE Main with CBSE: அதிர்ச்சி.. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளிலேயே ஜேஇஇ மெயின் தேர்வுகள்!
இதே தேதிகளில் ஜேஇஇ தேர்வுகளும் நடைபெற உள்ளன. காலை 9 முதல் 12 மணி வரை முதல் ஷிஃப்ட் தேர்வும் மதியம் 3 முதல் மாலை 6 வரை இரண்டாம் ஷிஃப்ட் தேர்வும் நடைபெற உள்ளது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களிலேயே ஜேஇஇ மெயின் தேர்வுகள் நடைபெற உள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் சேர கூட்டு நுழைவுத் தேர்வு (The Joint Entrance Examination - JEE) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 2ஆம் அமர்வு தேதி, அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ஏப்ரல் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 2025ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
மாணவர்கள் மத்தியில் குழப்பம்
இதே தேதிகளில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளும் நடக்க உள்ளன. இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் முக்கியமான அறிவியல் பாடப் பிரிவுகளான இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடப் பிரிவுகளுக்கான தேதிகளில் பிரச்சினை இல்லை. இந்த பாடங்களே ஜேஇஇநுழைவுத் தேர்வுக்கும் கேட்கப்பட உள்ளன.
எனினும் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஹோம் சைன்ஸ், உளவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல ஏப்ரல் 2ஆம் தேதி, பஞ்சாபி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, மலையாளம், ஒடியா, அசாமி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு நடத்தப்பட உள்ளது. தேர்வு காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெற உள்ளது.
ஒரே தேதிகளில் சிபிஎஸ்இ - ஜேஇஇ தேர்வுகள்
இதே தேதிகளில் ஜேஇஇ தேர்வுகளும் நடைபெற உள்ளன. காலை 9 முதல் 12 மணி வரை முதல் ஷிஃப்ட் தேர்வும் மதியம் 3 முதல் மாலை 6 வரை இரண்டாம் ஷிஃப்ட் தேர்வும் நடைபெற உள்ளது.
முக்கியமான, அறிவியல் அல்லாத பாடப் பிரிவுகள் ஒரே நாளில் நடத்தப்படுவதால், பெரிதாகப் பிரச்சினை இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

