மேலும் அறிய

TADCO Scheme: இலவசமாக ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கலாம்; எடுத்ததும் ரூ.35 ஆயிரம் ஊதியம்- எப்படி?

பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில்‌ 45 சதவீதம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌.

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர்‌ மற்றும்‌ படிங்குடியின மாணவ / மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட்‌ கேட்டரிங்‌ டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில்‌ இளங்கலை அறிவியல்‌ (B.Sc- Hospitality & Hotel Administration‌) பட்டப்படிப்பு மற்றும்‌ பட்டயப் படிப்புகள்‌ (Diploma) சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே தெரிவித்துள்ளார்‌.

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌(தாட்கோ) சார்பாக பன்னிரண்டாம்‌ வகுப்பு முடித்த ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பும்‌, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (B.Sc (Hospitality & Hotel Administration)) பட்டயப்‌ படிப்பும்‌ மேலும்‌ பத்தாம்‌ வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள்‌ உணவு தயாரிப்பு மற்றும்‌ பதனிடுதல்‌ கைவினைஞர்‌ (Craftsmanship Course in Food Production &Patisserie) ஆகிய படிப்புகளில்‌ சேர்ந்து பயில விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

எங்கு படிப்பு?

சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற நிறுவனமானது ISO 9001 2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும்‌. இந்நிறுவனமானது ஒன்றிய அரசின்‌ சுற்றுலா துறையின்‌ கீழ்‌ அமையப்‌ பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்‌, மேலும்‌ இந்நிறுவனம்‌ சர்வதேச American Council of Business அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும்‌ பிரான்ஸ்‌ நாட்டில்‌ உள்ளLycee Nicolas Appert Catering நிறுவனத்தில்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ செய்துள்ளது. Hotel Management Institute Survey 2022- ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில்‌ இரண்டாவதாக இடம்‌ பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில்‌ சிறந்த விருந்தோம்பல்‌ மற்றும்‌ ஹோட்டல்‌ மேலாண்மை பள்ளிகளில்‌ உலக தர வரிசையில்‌ பதிமூன்றாவது இடத்தில்‌ இந்நிறுவனம்‌ இடம்‌ பெற்றுள்ளது.

என்ன தகுதி?

மேற்கண்ட நிறுவனத்தில்‌ பயில ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தை சார்ந்தவராக ஒருக்க வேண்டும்‌. பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில்‌ 45 சதவீதம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌. இப்படிப்பிற்கான செலவீனம்‌ தாட்கோவால்‌ ஏற்கப்படும்‌.

இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும்‌ பட்‌சத்தில்‌ தங்களது திறமையின்‌ அடிப்படையில்‌ நட்சத்திர விடுதிகள்‌, உயர்தர உணவகங்கள்‌ விமானத்துறை, கப்பல்‌ துறை மற்றும்‌ சேவை துறை சார்ந்த நிறுவனங்களில்‌ பணிபுரிய வழிவகை செய்யப்படும்‌. ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 25,000/- முதல்‌ ரூ.35,000/- வரை பெறலாம்‌. பின்னர்‌ திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல்‌ ரூ.70,000/- வரை பதவி உயர்வின்‌ அடிப்படையில்‌ மாத ஊதியமாக பெறலாம்‌.

சேர்வது எப்படி?

இப்பயிற்சி நிறுவனத்தில்‌ சேர்வதற்கு தாட்கோ இணையதளம்‌ www.tahdco.com என்ற முகவரியில்‌ பதிவு செய்து பயன்‌ பெறலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்....
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Embed widget