Aaron Jones IPL 2025: கோடிகளில் புரளப்போகும் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் - எப்படி தெரியுமா?
அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸை 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் ஏலத்தில் எடுப்பதற்கு தற்போதே மூன்று அணிகள் முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் A பிரிவில் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது.
கலக்கும் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ்:
டி20 உலகக் கோப்பையில் முதன் முறையாக விளையாடி வரும் அமெரிக்க அணி 3 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் தோல்வி அடைந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் முக்கியமான வெற்றியாக பார்க்கப்பட்டது பாகிஸ்தான் அணிக்கு எதிரானது தான்.
அந்த வகையில் அமெரிக்க அணியின் கேப்டனான ஆரோன் ஜோன்ஸ் தனது அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இதுவரை அவர் விளையாடிய 3 இன்னிங்ஸ்களிலும் 94*, 36* மற்றும் 11 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் தான் 2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல். சீசனில் இவரை ஏலத்தில் எடுப்பதற்கு தற்போதே மூன்று அணிகள் முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எந்தெந்த அணிகள் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசன் 17-ல் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன்னர் அப் ஆனது. இச்சூழலில் தான் டாப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆரோன் ஜோன்ஸை எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
மும்பை இந்தியன்ஸ்:
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அந்த அணி குவாலிபியர் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணியில் தரமான பேட்டர்கள் இருந்தாலும் அதற்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக ஆரோன் ஜோன்ஸ் வரும் ஐபிஎல் சீசனில் மும்பை அணி ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்ரேயார் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ். வரும் சீசனில் தங்கள் அணிக்கு ஆரோன் ஜோன்ஸ் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங்குடன் இவர் பார்டன்ஷிப் அமைத்தால் அந்த அணி இன்னும் சிறப்பாக விளையாடும் என்று கூறப்படுகிறது. அதாவது 2025 ஆம் ஆண்டில் எப்படியும் அமெரிக்க வீரராக ஆரோன் ஜோன்ஸ் ஏதாவது ஒரு ஐபிஎல் அணியில் கால்பதிப்பார் என்பது மட்டும் உறுதி.
மேலும் படிக்க: Watch Video: முடிந்த போட்டிகள்! கரைய தொடங்கிய நாசாவ் கிரிக்கெட் ஸ்டேடியம் - இடிக்கத் தொடங்கிய புல்டோசர்கள்!
மேலும் படிக்க: T20 World Cup 2024: பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்துக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு இருக்கா?