அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
இந்து தந்தைக்கும், இஸ்லாமிய தாய்க்கும் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்த நடிகை தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக உலா வந்தார்.

திரையுலகின் ஒவ்வொரு பிரபலத்திற்கும் ஏதாவது ஒரு வித்தியாசமான பின்புலம் இருக்கும். அந்த வகையில் இந்து தந்தைக்கும், இஸ்லாமிய தாய்க்கும் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த ஒரு பிரபலத்தை பற்றி காணலாம்.
சல்மான் கான் ஜோடி:
1974ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்தவர் நந்திதா அர்விந்த் மொரார்ஜி. சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட நந்திதாவிற்கு இந்தியில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. அதுவும் முதல் படமே சல்மான்கான் படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிட்டியது. சல்மான் கான் ஜோடியாக பாகி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
இந்தி திரையுலகில் பட்டி தொட்டியெங்கும் மாபெரும் ஹிட் அடித்தது இந்த பாகி திரைப்படம். இந்த படத்திற்காக நந்திதா என்ற பெயர் மாற்றப்பட்டது. அப்படி அவருக்கு மாற்றி வைக்கப்பட்ட பெயர்தான் நக்மா. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கொடி கட்டி பறந்தவர் நக்மா.
இந்து தந்தை, இஸ்லாமிய தாய்:
நக்மா அனைத்து மதத்தின் மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். பல பேட்டிகளில் தனது தந்தை ஒரு இந்து, தனது தாய் ஒரு இஸ்லாமியர், தான் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர் என்று கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் மார்க்கத்தின் மீது பற்று கொண்ட நக்மா 2007ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.
நக்மாவின் தந்தை அர்விந்த் மொரார்ஜி. இவர் இந்து ஆவார். நக்மாவின் தாய் பெயர் சீமா என்ற ஷமா காசி. இவர் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர். நக்மாவின் தாய் மற்றும் தந்தை காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
கொடி கட்டிப் பறந்த கதாநாயகி:
தெலுங்கு, இந்தியில் மாறி, மாறி அசத்தியவர் தமிழில் காதலன் என்ற படம் மூலமாக அறிமுகமானார். முதல் படத்திலே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நக்மா ரஜினியுடன் பாட்ஷா படத்தில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ரஜினி, பிரபுதேவா, சரத்குமார், அஜித், பாக்யராஜ் என தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த காதலன், பாட்ஷா, பிஸ்தா, மேட்டுக்குடி, லவ் பேர்ட்ஸ் படங்கள் மாபெரும் வெற்றிப்படங்கள் ஆகும்.
நக்மாவின் தாய் 1974ம் ஆண்டு தனது கணவர் அர்விந்த் மொரார்ஜியை விவாகரத்து செய்தார். பின்னர், திரைப்பட தயாரிப்பாளர் சந்தர் சதானாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிறந்த குழந்தையே ஜோதிகா ஆவார். நக்மாவைப் போலவே ஜோதிகாவும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டிப்பறந்தவர். நக்மாவிற்கு ஜோதிகா மட்டுமின்றி ரோஷிணி என்ற சகோதரியும் உள்ளார். அவர் சிஷ்யா, துள்ளித் திரிந்த காலம் ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின்பு, நடிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

