மேலும் அறிய

TDS on FD interest: நிலையான வைப்புத்தொகை - FD வட்டி வருவாய், TDS கட்டணத்தை தவிர்ப்பது எப்படி? ஆலோசனை இதோ..!

TDS on FD interest: நிலையான வைப்புத்தொகை எனப்படும் FD வட்டி வருவாய் மீதான TDS கட்டணத்தை தவிர்ப்பது எப்படி? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

TDS on FD interest:  நிலையான வைப்புத்தொகை எனப்படும் FD வட்டி வருவாய் மீதான TDS கட்டணத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பிற்கான வழிகள்:

நிலையான வைப்புத்தொகை அதாவது FD, பொதுமக்கள் பலராலும் முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. நீங்கள் FD-யில் பணத்தை முதலீடு செய்த நிலையில்,  வட்டி வருவாய்க்கு விதிக்கப்படும் TDS அதாவது மூலத்தில் வரி கழிக்கப்படுவது குறித்து கவலைப்படுகிறீர்கள் என்றால், அந்த கவலை இனி வேண்டாம். ஏனென்றால் சில சிறப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வட்டி வருவாய்க்கு விதிக்கப்படும் TDS-ஐ நீங்கள் சேமிக்க முடியும். 

புதிய TDS விதிகளில் தளர்வு:

அரசாங்கம் TDS விதிகளை முன்பை விட சற்று எளிதாக்கியுள்ளது, இது FD செய்பவர்களுக்கு ஆதராவாக அமைந்துள்ளது. புதிய விதியின் கீழ், நீங்கள் 60 வயதுக்குக் குறைவானவராக இருந்தால், ஆண்டு வட்டி ரூ.50,000 க்கு மேல் இருந்தால் மட்டுமே TDS கழிக்கப்படும். இதற்குக் குறைவான வட்டி வருவாக்கு வரி கழிக்கப்படாது. மூத்த குடிமக்களுக்கு, அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இந்த வரம்பு ரூ.1,00,000 ஆகும். அத்தகைய சூழ்நிலையில், வட்டி இதை விடக் குறைவாக இருந்தால், அதற்கு எந்த வரியும் விதிக்கப்படாது.

TDS கட்டணத்தை தவிர்க்க வழிகள்:

வரிப் பதற்றம் இல்லாமல் உங்கள் FD வருமானத்தை அனுபவிக்க விரும்பினால், உங்கள் மொத்த வருமானம் FD வட்டியில் இருந்து மட்டுமே பெறப்பட்டு, அது ₹ 4 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், வங்கியில் ஒரு படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் TDS-ஐத் தவிர்க்கலாம். இந்தப் படிவங்கள் மூத்த குடிமக்களுக்கும், 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் வேறுபட்டவை. நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக (60 வயதுக்கு மேல்) இருந்தால், நீங்கள் வங்கியில் படிவம் 15H ஐ சமர்ப்பிக்க வேண்டும். இது FD வட்டியில் TDS கழிக்கப்படுவதைத் தடுக்கும். 60 வயதுக்குட்பட்டவர்கள் படிவம் 15G மூலம் வரியைச் சேமிக்கலாம். இந்தப் படிவத்தை ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்பு வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் FD-யின் முழு வட்டியையும் TDS கட்டண கழிப்பு இன்றி பெறுவீர்கள்.

படிவம் 15H மற்றும் 15G என்றால் என்ன?

படிவம் 15H என்பது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கும், அவர்களின் வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பை விடக் குறைவாக இருப்பவர்களுக்கும் பொருந்தும். இது சுய அறிவிப்பு ( Self Declaration) வடிவத்தில் வழங்கப்படுகிறது. இது அவர்களின் வைப்பு வருமானத்தில் எந்த TDS-ஐயும் ஈர்க்காது. மறுபுறம், நிலையான வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்கு அல்லது தொடர் வைப்புத்தொகைகளிலிருந்து உங்கள் வட்டி வருமானத்தில் TDS-ஐத் தவிர்க்க படிவம் 15G பயன்படுத்தப்படுகிறது. வரி விதிக்கக்கூடிய வரம்பை விடக் குறைவான வருமானம் கொண்ட 60 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு இது செல்லுபடியாகும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget