14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்
தமிழ்நாட்டில் 14,889 நபர்களுக்கு முன்னனி தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது..
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ்; வேலைவாய்ப்பு பயிற்சி (PM INTERNSHIP) வழங்கும் திட்டத்தின் வாயிலான நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 14,889 நபர்களுக்கு முன்னணி தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்வதற்கு தேவையான கல்வி தகுதியுடைய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 11.03.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இத்திட்டத்திற்கான சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24-வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5,000- வீதம் வழங்கப்படும். மேலும் பயிற்சிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மானியமாக ரூ.6,000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவர்கள் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றிருக்க கூடாது. மேலும் முழுநேர பணிசெய்பவராகவோ, முழுநேரக் கல்வி கற்பவராக இருக்ககூடாது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 12.03.2025 அன்று கடைசி நாளாகும்.
வலைதளங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்
மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்; (04562 -294755) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் இணையம் மூலம் விண்ணப்பிக்க https://

