மேலும் அறிய

Hardik Pandya: கேப்டன்சியிலும் தோல்வி! சொந்த வாழ்விலும் சறுக்கல்! ஹர்திக் பாண்ட்யாவிற்காக வருந்தும் ரசிகர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி, மனைவியுடனான விவாகரத்து விவகாரம் என அடுத்தடுத்து பெரும் பின்னடைவை ஹர்திக் பாண்ட்யா சந்தித்து வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமாக இருப்பவர் ஹர்திக் பாண்ட்யா. இந்த தொடரில் இவர் தலைமையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது.

ஹர்திக் பாண்ட்யா - நடாஷா விவகாரத்து?

மும்பை கேப்டன்சி ரோகித்திடம் இருந்து ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டது முதலே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் அவருக்கு, தற்போது தனிப்பட்ட வாழ்வில் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது, அவரது மனைவியும், பிரபல செர்பிய நாட்டு மாடல் மற்றும் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் பாண்ட்யாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடாஷா தனது பெயரின் பின்னால் உள்ள பாண்ட்யா என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரைப் பார்ப்பதற்கும் நடாஷா வரவில்லை. மேலும், சமீபகாலமாகவே ஹர்திக் பாண்ட்யா – நடாஷா இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகவில்லை. கடந்த மார்ச் 4ம் தேதி மனைவி நடாஷாவின் பிறந்த நாளுக்கும் ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து கூறவில்லை. இதுபோன்ற சூழலில், நடாஷா தனது பெயரின் பின்னால் இருந்த பாண்ட்யாவை நீக்கியது இருவரும் விவாகரத்து பெற உள்ளனர் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் வேதனை:

ஹர்திக் பாண்ட்யா அவரது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்ய நேரிட்டால், அவர் தன்னுடைய மனைவிக்க தன் சொத்தில் 70 சதவீதத்ததை ஜீவனாம்சமாக வழங்க நேரிடும். அந்த சூழல் நேரிட்டால் ஹர்திக் பாண்ட்யா இதுவரை தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சம்பாதித்த பெரும் தொகையை இழக்க நேரிடும். மும்பை கேப்டன்சியை பெற்று அடைந்த தோல்வி, ரசிகர்கள் மத்தியில் எழுந்த விமர்சனம், மோசமான ஆட்டம் தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவியுடனான தனிப்பட்ட விவகாரத்து விவகாரம், சொத்துக்களை இழக்க நேரிடும் அபாயம் என அடுத்தடுத்து ஹர்திக் பாண்ட்யா தொடர் சிரமங்களுக்கு ஆளாகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் துணை கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவிற்கு அடுத்தடுத்து சறுக்கல்கள் ஏற்படுவது இந்திய அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா மனைவி யார்?

செர்பியாவில் பிறந்து வளர்ந்த நடாஷா 2012ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடிப்பிற்காக தங்கி வருகிறார். இந்தியில் நடித்ததன் மூலம் ஹர்திக் பாண்ட்யாவுடன் பழக்கமானார். பின்னர், இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்கு முன்பே இவர்களுக்கு 2020ம் ஆண்டு குழந்தை பிறந்தது. 2013ம் ஆண்டு முதல் இந்தியில் நடித்து வரும் நடாஷா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் தொடரிலும் பங்கேற்று பிரபலமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!

மேலும் படிக்க: MS Dhoni Retirement: தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? முக்கிய தகவலை பகிர்ந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Breaking News LIVE: கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
Watch Video: பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. வைரலாகும் வீடியோ!
பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. வைரலாகும் வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Breaking News LIVE: கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
Watch Video: பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. வைரலாகும் வீடியோ!
பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. வைரலாகும் வீடியோ!
Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
Kanguva: “எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
“எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
Lok Sabha Session: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Embed widget