மேலும் அறிய

BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!

BCCI: பிசிசிஐ அல்லது தேர்வுக் குழுவிற்கு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீது எந்தவொரு தனிப்பட்ட பகையும் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

BCCI: சமீபத்தில் வெளியான பிசிசிஐ மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு ரஞ்சி டிராபி மற்றும் பிற உள்நாட்டு போட்டிகளில் விளையாடாததால், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். சமீபத்தில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களையும் நீக்குவது தனது முடிவு அல்ல, ஆனால் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரின் முடிவை எடுக்கமாறு தன்னிடம் கூறினார் என்று தெரிவித்தார். இப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐயர், கிஷான் உள்ளிட்ட 30 வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும், இவர்களை தேர்வுக் குழு உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும் செய்தி வந்துள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது ஐபிஎல் 2024 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) கேப்டனாக உள்ளார். இவரது தலைமையிலான கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார் இஷான் கிஷன். ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியனான இந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. 

30 வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்: 

தேசிய கிரிக்கெட் அகாடமியில் சுமார் ஒரு மாதம் நடைபெறும் பயிற்சி முகாம் விரையில் தொடங்கப்பட இருக்கிறது. இந்தப் பயிற்சி முகாமின் தலைவராக வி.வி.எஸ்.லக்ஷ்மன் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், மயங்க் யாதவ், முஷீர் கான், சாய் கிஷோர், பிருத்வி ஷா உள்ளிட்ட 30 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட இருக்கின்றன. இந்த 30 வீரர்களில் பெரும்பாலானோர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிய முஷீர் கான், மும்பை அணி ரஞ்சி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இவர் 2023-2024 ரஞ்சி டிராபியின் 3 நாக் அவுட் போட்டிகளில் 433 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து, முஷீர் கானும் இந்த முகாமில் பங்கேற்க இருக்கிறார். 

தேர்வாளர்களுக்கு ஐயர் மற்றும் கிஷன் மீது பகை இல்லை - பிசிசிஐ

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கையில், "பிசிசிஐ அல்லது தேர்வுக் குழுவிற்கு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீது எந்தவொரு தனிப்பட்ட பகையும் இல்லை. அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் மனோபாவத்தை மேம்படுத்தி அந்தந்த மும்பை மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்காக விளையாடினால், அது சரியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது செயல்திறன் நன்றாக இருந்தால், அவர்கள் இருவரும் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவது முற்றிலும் சாத்தியமாகும். இதையடுத்தும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீதும் ஒரு கண் வைத்திருக்கும்” என்று தெரிவித்தது. 

இந்த சிறப்பு முகாமில் ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், தேவ்தத் படிக்கல், அவேஷ் கான், முஷீர் கான், சாய் கிஷோர், ரியான் பராக், பிருத்வி ஷா, மயங்க் யாதவ், உம்ரான் மாலிக், அவேஷ் கான், குல்தீப் சென், ஹர்ஷித் ராணா, கலீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக், அசுதோஷ் சர்மா, சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், ஷம்ஸ் முலானி மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோரும் இந்த வீரர்களில் அடங்குவர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget