"நிறைய மாறிடுச்சு" சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் பத்தி ராகுல் டிராவிட் இப்படியா சொன்னார்!?
டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராகுல் டிராவிட் சேப்பாக்கம் மைதானம் மற்றும் சென்னை ரசிகர்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முனனாள் கேப்டன் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய கிரிக்கெட் அணிக்காக வீரராக மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ராகுல் டிராவிட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசத்தலான பல்வேறு வரலாறு படைத்துள்ளார். இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் சேப்பாக்கம் ரசிகர்கள்:
அப்போது, அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏராளமான லீக் போட்டிகள் ஆடியது எனது சிறந்த நினைவுகள் ஆகும். இங்குதான் வளர்ந்தோம். மைதானம் தற்போது நிறைய மாறிவிட்டது. இந்த மாற்றத்தை பார்க்க அழகாக உள்ளது. லீக் கிரிக்கெட் விளையாடியது மிகவும் அழகானது. இங்கு ஏராளமான சர்வதேச போட்டிகள் ஆடியுள்ளேன். இந்த ரசிகர்கள் கூட்டத்தின் முன்பு கிரிக்கெட் ஆடுவது நன்றாக இருக்கும்.
நாட்டிலே வீரர்களை நன்றாக ஊக்கப்படுத்தக்கூடிய மைதானங்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள ரசிகர்கள் கிரிக்கெட் பற்றி அறிந்தவர்கள். கிரிக்கெட்டை நேசிப்பவர்கள். சேப்பாக்கத்தில் விளையாடுவதை எப்போதும் விரும்புவேன். என்னுடைய 10 ஆயிரம் ரன்னை இங்குதான் கடந்தேன். அது என்னுடைய சிறப்பான தருணம் என்று கூறினார்.
சென்னை மக்கள் முன் விளையாடியது எப்பொழுதும் Super-ஆன Moment தான்! - Dravid 💯😌#TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu @TNPremierLeague pic.twitter.com/pI19MqiMkx
— Star Sports Tamil (@StarSportsTamil) August 4, 2024
திண்டுக்கல் சாம்பியன்:
51 வயதான ராகுல் டிராவிட் இந்திய அணியில் சச்சின், கங்குலிக்கு நிகராக தவிர்க்க முடியாத வீரராக உலா வந்தவர். மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 36 சதங்கள், 5 இரட்டை சதங்கள், 63 அரைசதங்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 12 சதங்கள், 83 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 889 ரன்களும் எடுத்துள்ளார். 89 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 11 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 174 ரன்களும் எடுத்துள்ளார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 130 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வினின் அபார அரைசதத்தின் உதவியுடன் 131 ரன்களை எடுத்து கோப்பையை வென்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

