Bullet Train: சென்னை To பெங்களூர்... வேகம்னா வேகம் அப்படி ஒரு வேகம்.. புல்லட் ரயிலில் எவ்வளவு சீக்கிரம் போகலாம்?
Chennai Bengaluru Mysuru Bullet Train: ஹைதராபாத் - சென்னை வழித்தடம் 757 கிலோமீட்டர்களை உள்ளடக்கியது, வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15 மணி நேரம் எடுக்கும்போது, புல்லட் ரயில் இந்த நேரத்தை வெறும் 2.5 மணி நேரமாகக் குறைக்கும்.

புல்லட் ரயில் சேவை
இந்தியாவின் முதன்முதல் புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் 2017 இல் துவங்கப்பட்டு, மும்பை-அகமதாபாத் இடையே பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இவற்றில், நீருக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை, 175,000 இரைச்சல் தடுப்புகள், 700 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இந்தியாவில் புதிதாக அமைக்கப்படும் புல்லட் ரயில் சேவைகளின் பாதைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய கனவு திட்டமான புல்லட் இரயில் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஹைதராபாத் மற்றும் மும்பை இடையே 709 கிலோமீட்டர் அதிவேக ரயில் பாதையை அமைக்க முடிவு
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவில் புல்லட் ரயில் சேவை என்கின்ற ஒரு முக்கியமான பணி மேற்கொண்டு வருகிறது. புல்லட் ரயில் நெட்வொர்க்குகள் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக, ஹைதராபாத் மற்றும் மும்பை இடையே 709 கிலோமீட்டர் அதிவேக ரயில் பாதையை அமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
மேலும், இந்த வழித்தடத்தை பெங்களூர் வரை நீட்டிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும், மைசூர் - சென்னை அதிவேக ரயில் வழித்தடத்தை ஹைதராபாத் வரை நீட்டிக்கும் திட்டங்களும் விவாதிக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, ஜப்பானிய தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் பாதை மும்பை மற்றும் அகமதாபாத் இடையே கட்டப்பட்டு வருகிறது. நாட்டின் புல்லட் ரயில் விரிவாக்கத்தின் அடுத்த கட்டம், ஹைதராபாத் - மும்பை, ஹைதராபாத் - பெங்களூரு, மற்றும் ஹைதராபாத் - சென்னை வழித்தடங்களில் புதிய வழித்தடங்களை உள்ளடக்கியது. இந்த வழித்தடங்களில் சில, குறிப்பாக ஹைதராபாத் - சென்னை மற்றும் ஹைதராபாத் - பெங்களூரு வழித்தடங்கள், உயரமான மற்றும் நிலத்தடி பாதைகளின் கலவையைப் பயன்படுத்தி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15 மணிநேரம் எடுக்கும் போது, புல்லட் ரயில் இந்த நேரத்தை வெறும் 2.5 மணி நேரமாகக் குறைக்கும்
ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடமானது 618 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது, இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயணம் வழக்கமான சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சுமார் 11 மணிநேரமும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் 8.5 மணிநேரமும் ஆகும். புல்லட் ரயில் அறிமுகத்தால், இந்த பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், ஹைதராபாத்-சென்னை வழித்தடம் 757 கிலோமீட்டர்களை உள்ளடக்கியது, வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15 மணிநேரம் எடுக்கும் போது, புல்லட் ரயில் இந்த நேரத்தை வெறும் 2.5 மணி நேரமாகக் குறைக்கும். தமிழகத்திற்குள் இந்த வேகத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் திருச்சி - சென்னை இடையேயான 330 கிமீ தூரத்தை இந்த ரயில் சுமார் 1 மணி நேரத்தில் கடக்கும் என கணக்கிடப்படுகிறது. இருப்பினும், இந்த புல்லட் ரயில் திட்டப்பணிகளை முடிக்க 10 முதல் 13 ஆண்டுகள் ஆகலாம் என ரயில்வே அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
புதிய புல்லட் ரயில் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் (எம்ஏஎச்எஸ்ஆர்) திட்டம் (508 கிமீ) என்பது ஜப்பான் அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்தியாவின் ஒரே அதிவேக இரயில் திட்டமாகும்.
புதிய புல்லட் ரயில் சேவை துவங்கும்!
- டெல்லி - வாரணாசி
- டெல்லி - அகமதாபாத்
- டெல்லி - அமிர்தசரஸ்
- மும்பை - நாக்பூர்
- மும்பை - புனே - ஹைதராபாத்
- சென்னை - பெங்களூர் - மைசூர்
- வாரணாசி - ஹவுரா
இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே தென்னிந்திய பாதை சென்னை - பெங்களூர் - மைசூர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

