மேலும் அறிய

Team India 2024 Schedule: ஐபிஎல் முதல் 2024 டி20 உலகக் கோப்பை வரை.. அடுத்த ஆண்டு இந்திய அணி விளையாடும் லிஸ்ட் இதோ!

அடுத்த ஆண்டு எந்த அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது? 2024 இல் இந்திய அணியின் முழு அட்டவணையைப் பற்றி இன்று பார்ப்போம்.

2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி மிகப்பெரிய இரண்டு வாய்ப்புகளை தவறவிட்டாலும், சிறப்பாகவே விளையாடியது. இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை 2023 என இரண்டு இறுதிப் போட்டிக்கு வந்து தோல்வியடைந்தாலும், சாம்பியனாக முடியாமல் போனாலும் சிறப்பாக விளையாடி அசத்தியது. இன்று டிசம்பர் 31ம் அதாவது 2023ன் கடைசி நாள். இந்திய கிரிக்கெட் பெண்கள் மற்றும் மகளிர் அணிகள் இந்த ஆண்டு அனைத்து வடிவங்களிலும் களமிறங்கி எதிரணிக்கு பயத்தை விதைத்தது. 

இதுபோக, சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளன.

முதலில் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது, பின்னர் கங்காருக்கள் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தியது. இது தவிர இந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் தொடரை வெல்லும் இந்தியாவின் கனவும் தகர்ந்தது. அடுத்த ஆண்டு எந்த அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது? 2024 இல் இந்திய அணியின் முழு அட்டவணையைப் பற்றி இன்று பார்ப்போம்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் இந்திய அணி புத்தாண்டை அதாவது 2024ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. இதன் பிறகு, ஜனவரி 11 முதல் 17 வரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. டி20 உலகக் கோப்பையைத் தவிர, 2024 ஆம் ஆண்டில், டீம் இந்தியா ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பல்வேறு வடிவங்களில் தொடரில் விளையாடும். இது தவிர, நீண்ட போட்டியாக இருக்கும் ஐபிஎல் 2024ல் இந்திய வீரர்கள் அனைவரும் விளையாட இருக்கின்றன. 

2024ல், டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா செல்கிறது. இதன் பிறகு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் அதே எண்ணிக்கையிலான டி20 தொடர்களுக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் தவிர, இந்திய அணி நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது.

2024 இல் இந்திய அணியின் முழு அட்டவணை:

  • ஜனவரி - தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டாவது டெஸ்ட்
  • ஜனவரி 11 முதல் 17 வரை - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்
  • ஜனவரி 25 முதல் மார்ச் 11 வரை - இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்
  • மார்ச் இறுதி முதல் மே இறுதி வரை - ஐபிஎல் 2024
  • ஜூன் 4 முதல் ஜூன் 30 வரை - 2024 டி20 உலகக் கோப்பை
  • ஜூலை 2024- இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 

தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை: 

  • செப்டம்பர் 2024- வங்கதேச அணிக்கு எதிரான மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்கள் (தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை)
  • அக்டோபர் 2024- நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
  • நவம்பர்-டிசம்பர் 2024- ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget