IND W vs SA W: மகளிர் உலகக் கோப்பை - இந்திய அணி 274 ரன்கள் குவிப்பு
தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான ‘டூ ஆர் டை’ போட்டியில் இந்திய மகளிர் அணி 274 ரன்கள் குவித்தது.
மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 274 ரன்கள் குவித்தது. கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 71, கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்கள் எடுத்தனர்.
இது இந்திய தரப்பில் உள்ள அனைத்து பேட்டர்களின் கூட்டு ஆட்டமாகும். ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, மிதாலி ராஜ் ஆகியோர் அரைசதம் அடித்து இந்திய அணியை சவாலான ஸ்கோரை எட்டினர். ஹர்மன்பிரீத் கவுரும் 48 ரன்களை குவித்து இறுதி கட்டத்தில் இந்தியாவுக்கு உதவினார்.
Youngest Indian to score 50 in WC - Mithali Raj
— BCCI Women (@BCCIWomen) March 27, 2022
Oldest Indian to score 50 in WC - Mithali Raj
Pure class, quality and longevity. Well done, skip @M_Raj03 🙌🏾🙌🏾 pic.twitter.com/4HbpjPm12P
ஷஃபாலி வர்மா, இன்னிங்ஸை துவக்கி, 115 ஸ்டிரைக் ரேட்டில் அடித்து இந்தியாவை வலுவான நிலையில் வைத்தார். இந்திய வீரர்கள் கொடுத்த வேகமான தொடக்கத்தால் இந்திய மகளிர் அணி 15 ஓவர்களில் 91/1 என்று இருந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். இல்லையென்றால் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிடும். இதனால், இந்திய பந்துவீச்சாளர்கள், தீப்தி சர்மா, மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட் மற்றும் பலர் இந்தியாவை அரையிறுதிக்கு கொண்டு வர நன்றாக பந்து வீச வேண்டும்.
South Africa gave away just 51 runs in the last 10 overs, as India set a target of 275 today
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 27, 2022
Will India secure a top-4 finish or will Sune Luus' side chase this down? #INDvSA #CWC22
தற்போது தென்னாப்பிரிக்க அணி 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது விளையாடி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்