CWG 2022 Wrestling: காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 4வது தங்கத்தை வென்ற ரவிக்குமார் தஹியா
காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் ரவிக்குமார் தஹியா இறுதிப் போட்டியில் விளையாடினார்.
காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா பங்கேற்றார். இவர் முதல் இரண்டு சுற்றுகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அரையிறுதிப் போட்டியில் இவர் பாகிஸ்தான் வீரர் அசாத் அலியை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் 14-4 என்ற கணக்கில் ரவிக்குமார் தஹியா பாகிஸ்தான் வீரரை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா நைஜீரியாவின் வெல்சன் எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே இரு வீரர்களும் புள்ளிகள் எடுக்க முயற்சி செய்தனர். அதன்பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அசத்தலாக புள்ளிகளை குவித்தார். இறுதியில் 10-0 என்ற கணக்கில் போட்டியை வென்று அசத்தினார். அத்துடன் இந்தியாவிற்கு 4வது தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார்.
1st GOLD medal of the day ✨
— India_AllSports (@India_AllSports) August 6, 2022
Star wrestler Ravi Kumar Dahiya wins Gold medal after beating 2 time reigning CWG medalist 10-0 in Final (57kg).
👉 Its 10th Gold medal for India #CWG2022 #CWG2022India pic.twitter.com/LaDNXxan0p
மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் பூஜா கேலோத் பங்கேற்றார். இவர் முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அரையிறுதி போட்டிக்கு இவர் முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் இவர் கனடாவின் மேடிசன் பார்க்ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்தியாவின் பூஜா கேலோத் 9-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பூஜா கேலோத் ஸ்காட்லாந்து நாட்டின் கிறிஸ்டினாவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே பூஜா கேலோத் ஆதிக்கம் செலுத்தினார். இதன்காரணமாக இவர் 12-2 என்ற கணக்கில் எளிதாக போட்டியை வென்றார். அத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்