அகில இந்திய ஹாக்கி போட்டி: இறுதிப் போட்டிக்கு போபால்,புவனேஸ்வர் அணி தகுதி
அகில இந்திய ஹாக்கி போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூபாய் ஒரு இலட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு எழுபத்து ஐந்தாயிரமும், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ஐம்பதாயிரமும், நான்காவது இடம் பெறும் அணிக்கு முப்பதாயிரமும் இலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டி-இறுதி போட்டிக்கு போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ,புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி தகுதி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் அகில இந்திய அளவிலான பல்வேறு ஹாக்கி அணிகள், அதாவது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - அகமதாபாத், சென்ட்ரல் செக்ரிட்டேட் - நியூ டெல்லி, சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) - போபால் மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் கலந்து கலந்துகொண்டு விளையாடின. இந்த அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன.
அகில இந்திய ஹாக்கி போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூபாய் ஒரு இலட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு எழுபத்து ஐந்தாயிரமும், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ஐம்பதாயிரமும், நான்காவது இடம் பெறும் அணிக்கு முப்பதாயிரமும் இலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் இருபதாயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
லீக் போட்டி முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் பிடித்த அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.காலியிறுதி போட்டிகள் முடிவுற்ற நிலையில் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. முதல் அரையிறுதி போட்டியில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும், போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் மோதின.பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இதில் 4:2 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும். மோதின.போட்டி தொடங்கிய இரு அணி வீரர்களும் சம பலத்தில் மோதினர். போட்டி முடிவில் 2 - 2 என்ற கோல் கணக்கில் சமன் பெற்ற நிலையில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு அதில் 2 - 1என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வெற்றிப் பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.இன்று மாலை நடைபெறும் முதலாவது போட்டியில் மூன்றாவது இடத்திற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டெல்லி அணியும் அதனை எதிர்த்து பெங்களூரு கனராவங்கி அணியும் விளையாடுகிறது.
இன்று இரவு நடைபெறும் இறுதி போட்டியில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் மோதுகின்றன.