(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: விளையாடும் போது ஏற்பட்ட அடுத்த மரணம்; கால்பந்து மைதானத்திலேயே துடிதுடித்து இறந்த வீரர்..!
ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து இறந்தார்.
ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் மாதம் 5ஆம் தேதி ஒரு போட்டியின் போது மைதானத்தில் திடீரென கீழே விழுந்து இறந்தார். 21 வயதான முஸ்தபா சைல்லா உள்நாட்டு லீக் ஆட்டத்தின் போது சோல் எஃப்சி கால்பந்து கிளப்க்கு எதிராக ரேசிங் கிளப் அபிட்ஜானுக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து இறந்தார்.
இந்த சம்பவத்தை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கால்பந்து வீரர் சைல்லா முதலில் தடுமாறி தரையில் விழுந்ததைக் பார்க்க முடிகிறது. மேலும், "21 வயதான சைல்லா கால்பந்து விளையாடும் போது திடீரென இறந்தார். அவரது மரணத்திற்கு காரணம் மாரடைப்பு" என்று ட்விட்டர் பதிவின் தலைப்பில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டரில்,ஒருவர் சைல்லாவின் மறைவை உறுதிப்படுத்தினார். "எங்கள் அணியின் முஸ்தபா சைல்லா இன்று மாலை ஆடுகளத்தில் திடீரென இறந்தார். நிர்வாகம் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை அனுப்புகிறது. ஓய்வெடு முஸ்தபா. ஓய்வெடு முஸ்தபா" என்று கால்பந்து கிளப் பிரெஞ்சு மொழியில் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.
Moustapha Sylla, défenseur du Racing Club d’Abidjan, est mort à l'âge de 21 ans, à la suite d'un malaise en plein match.
— FOOTBALL-TIME 🌟 (@__Footballtime) March 6, 2023
Qu'il repose en paix. 🙏🕊️❤️ pic.twitter.com/ZFiYCQzUxE
ஐவரி கோஸ்ட்டின் டபூவில் உள்ள முனிசிபல் கல்லறையில் சில்லாவின் உடல் வரும் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கிடையில் இஎஸ்பிஎன் - படி , கால்பந்து வீரரின் மரணம் குறித்து, முன்னாள் ஐவரி கோஸ்ட் மற்றும் செல்சி வீரர் டிடியர் ட்ரோக்பா, இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களிலிருந்து வீரர்களைப் பாதுகாக்க பலவற்றைச் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஐவோரியன் கால்பந்துக்கு இரங்கல்கள். நான்கு ஆண்டுகளுக்குள் தொழில்முறை லீக் வீரர்கள் மூன்று பேர் இறந்துள்ளனர். ஒவ்வொரு தொழில்முறை வீரருக்கும் கட்டாய மருத்துவ சிகிச்சைகள் செய்ய வேண்டும். இரத்த பரிசோதனைகள், இசிஜிகள், மன அழுத்த சோதனைகள் முறையாக எடுக்கப்பட்டு அவர்களுக்கான மருந்துகள் முறையாக வழங்கப்பட வேண்டும்.
2017 ஆம் ஆண்டு பயிற்சியின் போது ட்ரோக்பாவின் முன்னாள் சர்வதேச அணி வீரரான செக் டோய்ட் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கபடி விளையாடிய மாணவருக்கு மாரடைப்பு
ஆந்திராவில் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள மடகசிரா பகுதியைச் சேர்ந்த தனுஜ் குமார் நாயக் என்ற 18 வயது மாணவர், தனது நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். இவர் சமீபத்தில் தான் கல்லூரியில் சேர்ந்துள்ளார். முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கபடிக் களத்தில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர் ரெய்டுக்கு வந்தபோது, மற்ற ஐந்து பேருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென பின்னால் விழுந்த நாயக் அங்கேயே சரிந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. கபடி விளையாடிய மாணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வெளியான வீடியோ
நடந்த இந்த முழு சம்பவமும் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் நாயக் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் ஒன்றாக நிற்பதைக் காண முடிகிறது. "விளையாட்டு நடந்து கொண்டிருந்தபோது, மாணவர் தரையில் சரிந்தார், நாங்கள் உடனடியாக நாடித்துடிப்பைச் பார்த்தோம், அது மிகவும் பலவீனமாக இருந்தது," என்று அங்கு நின்றிருந்த நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் கூறியதாக மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.