மேலும் அறிய

சென்னைக்கு வந்த  திருச்சானூர் பத்மாவதி தாயார் - TTD  கோயிலில்  களைக்கட்டும் கும்பாபிஷேகம்

நடிகை காஞ்சனா வெங்கடாசலபதி பெருமாளுக்கு காணிக்கையாக கொடுத்த 40 கோடி ரூபாய் மதிப்புடைய 6 கிரவுண்ட் இடத்தில்தான் இந்த பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி பெருமாளை, தி.நகரில் உள்ள கோயிலுக்கு கொண்டு வந்ததுபோல, திருச்சானூர் பத்மாவதி தாயாரையும் தி.நகருக்குக் கொண்டு வந்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம். பழம்பெரும் நடிகை காஞ்சனா, திருப்பதி பெருமாளுக்கு காணிக்கையாக கொடுத்த சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தில்தான் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 17-ம் தேதி நடைபெறும் இக் கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்கு, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா என பல இடங்களில் இருந்து பக்தர்கள் மட்டுமல்ல, விவிஐபி-களும் குவிய இருக்கிறார்கள்.

சென்னைக்கு வந்த  திருச்சானூர் பத்மாவதி தாயார் -  TTD  கோயிலில்  களைக்கட்டும் கும்பாபிஷேகம்

புதிய கோயிலுக்கான முன்கதை:

திருப்பதி திருமலைக்கு வெங்கடாசலபதியை தரிசிக்க செல்லமுடியாத பலர், சென்னை தி.நகர் வெங்கட்நாராயணசாலையில் உள்ள TTD எனப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாசலபதி கோயிலுக்கு வந்துச்செல்வர்.  அந்த அளவுக்கு திருப்பதி பெருமாளை அப்படியே தத்ரூபமாக வைத்ததுபோல் இருப்பதால், இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையால், குறிப்பாக, சனிக்கிழமை மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் போக்குவரத்து நெரிலே உருவாகிவிடும்.

நீண்ட காலமாக, சென்னையில் வெங்கடாசலபதி பெருமாளைத் தரிசிப்பவர்கள், திருச்சானூர் அல்லது அலமேலுமங்காபுரத்தில் உள்ள தாயார் பத்மாவதியை தரிசிக்க முடியவில்லையே என கூறுவது மட்டுமல்ல, இது தொடர்பாக, திருலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் மூலமும் பலமுறை வலியுறுத்தி வந்தனர். TT தேவஸ்தானமும் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவதற்கு பல இடங்களைப் பார்த்து வந்தனர்.

எப்படி திருப்பதியில், மேலே உள்ள திருமலையில் பெருமாளைப் பார்த்துவிட்டு, கீழ் திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் அல்லது அலமேலுமங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரையும் பார்த்துவிட்டு வந்தால்தான் பக்தர்களுக்கு முழு திருப்தி ஏற்படும் என பெரியவர்கள் கூறுவதுண்டு. சில பக்தர்கள், பத்மாவதி தாயாரைப் பார்த்துவிட்டுதான், பெருமாளையே தரிசிக்க வேண்டும் என சொல்வதும் உண்டு. எது எப்படி இருந்தாலும், திருவேங்கடத்தானைப் பார்ப்போர், பத்மாவதி தாயாரையும் தரிசித்து வரும் போதுதான், திருப்பதி யாத்திரை முழுமைப் பெறுகிறது என சான்றோரும் முன்னோரும் உறுதியாக கூறுவர்.

சென்னைக்கு வந்த  திருச்சானூர் பத்மாவதி தாயார் -  TTD  கோயிலில்  களைக்கட்டும் கும்பாபிஷேகம்

அந்த வகையில்தான், சென்னை தி. நகரில் உள்ள வெங்கட்நாராயண சாலையில் உள்ள பெருமாளை பார்த்துவிட்டு, அதற்கு அருகிலேயே பத்மாவதி தாயாருக்கும் கோயில் கட்டுவதற்கு TT தேவஸ்தானம் இடம் பார்த்து வந்தது. அப்போதுதான் நடிகை காஞ்சனாவின் காணிக்கை தேவஸ்தானதிற்கு உரிய இடத்தைக் காட்டியது.

இவ்வளவு கோடியை, காஞ்சனா கொடுத்தது ஏன்?

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சென்னையில் வசித்து வந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது.தற்போது 80 வயதைத் தாண்டியிருக்கும் காஞ்சனாவுக்கு சென்னையில் தி.நகர் உட்பட பல  இடங்களில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்துள்ளன. அவருடைய உறவினர்கள் சிலர் இந்தச் சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாகக் கூறி, பல ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் நடிகை காஞ்சனா.  வழக்கு இழுத்துக் கொண்டே இருந்த போது, இந்த வழக்கில் தாம் வெற்றிப் பெற்றால், கிடைக்கும் சொத்துக்களை அப்படியே திருப்பதி பெருமாளுக்கு கொடுத்துவிடுவேன் என வெளிப்படையாக அறிவித்து இருந்தார் நடிகை காஞ்சனா.

சென்னைக்கு வந்த  திருச்சானூர் பத்மாவதி தாயார் -  TTD  கோயிலில்  களைக்கட்டும் கும்பாபிஷேகம்

சில ஆண்டுகளில் நடிகை காஞ்சனாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து, அனைத்து சொத்துக்களும் அவர் வசம் வந்தன. அவரும் சொன்னபடியே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்துகளை திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு எழுதி வைத்தார். அதில் ஒன்றுதான், சென்னை தியாகராயநகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள காலி இடம். சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த  6 கிரவுண்ட இடத்தில்தான் தற்போது TT தேவஸ்தானம் சார்பில், பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது.

திருச்சானுரே சென்னைக்கு வந்தது போல்….

2 ஆண்டுகளாகக்  கட்டப்பட்டு வந்த இந்தக் கோயில், மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவையும் கட்டப்பட்டுள்ளன. தற்போது கட்டப்படும் கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்றே தாயார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு வந்த  திருச்சானூர் பத்மாவதி தாயார் -  TTD  கோயிலில்  களைக்கட்டும் கும்பாபிஷேகம்

திருச்சானூர் பத்மாவதி  தாயார் கோயில் போல் பிரம்மாண்டமாக இல்லை என்றாலும், கிட்டத்தட்டஅதே பாணியில் இங்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்வது போன்ற ஒரு திருப்தி, இந்தக் கோயிலில் கிடைக்கும் என்று சொன்னாலும் தவறில்லை. அந்த அளவுக்கு நேர்த்தியாக கோயில் கட்டப்பட்டுள்ளது.  எனவே, திருமலையில் பெருமாளையும் திருப்பதி அருகே உள்ள திருச்சானூரில் தாயாரையும் தரிசிப்பது போல், சென்னை தி.நகரில் வெங்கட்நாராயண சாலையில் பெருமாளையும் ஜி.என்.  சாலையில் தாயாரையும் தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைத்துள்ளது என்றால் மிகையில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget