மேலும் அறிய

Thiruppavai 11: மார்கழி 11...தொழில் தர்மத்தையும் தீமைகளை எதிர்ப்பவனையும் போற்றுவர்: இன்றைய திருப்பாவை!

Margali 10: மார்கழி மாதம் பதினொன்றாவது நாளான இன்று, இந்நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.

மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.

திருப்பாவை பத்தாவது பாடல் மூலம், தூங்கி கொண்டிருக்கும் தோழியை நகைச்சுவையாக எழுப்புவது போல் காட்சிபடுத்திய ஆண்டாள், பதினொன்றாவது பாடல் மூலம், தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் அப்படிப்பட்ட தலைவனை வணங்க செல்ல, தூக்கத்தில் இருந்து எழுந்து வருவாயாக என தோழியை ஆண்டால் எழுப்புவது போல பாடல் அமைத்திருக்கிறார்.

பதினொன்றாவது பாடல் விளக்கம்:

கன்று இருக்க கூடிய பசு மாட்டில் இருந்து பால் கறக்க கூடியவர் கண்ணன் என ஆண்டாள் காட்சி படுத்துகிறார். இதன் மூலம் கூற வருவது யாதெனில், மாட்டிலிருந்து பால் கறக்கும் முன், கன்று குடித்த பின்தான் பால் கறப்பர், அதுதான் தர்மம். 

ஆனால், சில நேரங்களில் கன்றுகள் இறந்து விட்டால், வைக்கோலை வைத்து பொம்மை போன்ற கன்றை உருவாக்கி சிலர் பால் கறப்பர். கன்று இல்லையென்றால் பசு பால் சுரப்பது குறைந்து விடும் என்பதால். ஆனால், அது ஆயர் குல நியதி இல்லை, பசுவை ஏமாற்றும் செயல்.

ஆனால் கண்ணன் கன்று இருக்க கூடிய பசுவிடம் மட்டுமே பால் கறக்க கூடிய ஆயர் குல தர்மம் கொண்ட தலைவன் என ஆண்டாள் கூறுகிறார். மேலும், பகைமையை வென்று மக்களை காப்பாற்ற கூடிய தலைவன் என்றும் கண்ணனை ஆண்டாள் புகழ்கிறார்.

அப்படி,புகழ் வாய்ந்த கர்ணனை போற்றி பாட வேண்டும், ஆகையால் சீக்கிரம் எழுந்து வா என்றும் அழகான தோற்றம் கொண்டவளே, மயில் போல இருப்பவளே, உனக்காக அனைத்து தோழிகளும் வாசலில் காத்து கொண்டிருக்கிறோம். 

சீக்கிரம் எழுந்து வா, நீராடி விட்டு கண்ணன் புகழ் பாட வேண்டும் என தோழியை இதர தோழிமார்கள் எழுப்புகின்றனர்.

இப்பாடல் மூலம், செய்யும் தொழில் தர்மத்தையும், கொடுஞ்செயல்களை எதிர்ப்பவனையும் பலரும் போற்றுவர் என குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறார்.

திருப்பாவை பதினொன்றாவது பாடல்:

கன்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

  செற்றார் திறல் அழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

  புற்றர வல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்

  முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்

ஆண்டாள்:

Thiruppavai 11: மார்கழி 11...தொழில் தர்மத்தையும் தீமைகளை எதிர்ப்பவனையும் போற்றுவர்: இன்றைய திருப்பாவை!

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.

பக்தி இயக்கம்:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.

தொடர்ந்து படிக்க: Thiruppavai 10: மார்கழி 10ஆம் நாள்... கும்பக்கர்ணன் தூக்கம்... இந்நாளுக்கு ஆண்டாள் இயற்றிய பாடல் இதுதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Embed widget