மேலும் அறிய

Disabilities Transport: இனி எந்த குறையும் இல்லை - பேருந்து, மெட்ரோக்களில் அதிரடி மாற்றம் - என்ன வசதி தெரியுமா?

Disabilities Transport Facilities: பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்கலிக்கு இடமளிப்பது கட்டாயமாக்கும் புதிய வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Disabilities Transport Facilities: பொதுப்போக்குவரத்தில் மாற்று திறனாளிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்:

பொதுப்போக்குவரத்தில் மாற்று திறனாளிகளுக்கான பயண அனுபவங்களை எளிதாக்கும் நோக்கில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் வீல் சேர்களுக்கான இடவசதி, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் படிகட்டுகள் இல்லாத கழிவறைகள், சாய்வுப்பாதைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கையாள பயிற்சி பெற்ற நபர்களை விமான, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவைகளில் பணி நியமனம் செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஒரு பகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, இந்த வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டு பொதுமக்களின் கருத்துகளையும் கோரியுள்ளன.

வரைவு வழிகாட்டுதல்கள் சொல்வது என்ன?

போக்குவரத்து அணுகல் கட்டமைப்பு (Transport Accessibility Framework) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில், பெரும்பாலானவை விவாதத்திற்குட்பட்டவை அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அந்த வழிகாட்டுதல்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் புக்கிங், பயணம், உட்கட்டமைப்பு மற்றும் அவசர சூழலுக்கு பதிலளிப்பது ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துக்கான வழிகாட்டுதல்கள் என்ன?

  • மத்திய அரசு திட்டத்தின் கீழ் இனி கொள்முதல் செய்யப்படும் அனைத்து பேருந்துகளிலும் கீழ் தள நுழைவு, சாய்தள வழி, பாதுகாப்பு பெல்ட்கள், வீல் சேர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்
  • PM eBus Sewa மற்றும் Type III இன்டர்சிட்டி பேருந்துகள் போன்ற தற்போதுள்ள சேவைகளும் சோதிக்கப்பட்ட லிஃப்ட் அல்லது சாய்வுதளங்களை உள்ளடக்கிய மறுசீரமைப்புக்கு உட்படும்.
  • ஒவ்வொரு பேருந்திலும் குறைந்த இயக்கம் கொண்ட பயணிகளுக்கு சீட் பெல்ட்களுடன் கூடிய குறைந்தது நான்கு இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும்

மெட்ரோ, ஏர்போட்டிற்கான வழிகாட்டுதல்கள்

  • மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளுக்கு, நடைமேடைகளில் ரப்பர் கேப் ஃபில்லர்ஸ் மற்றும் ஏறும் சாய்வுப் பாதைகள் இருக்க வேண்டும்

  • சக்கர நாற்காலி அணுகலுக்காக பெட்டிகள் இருக்க வேண்டும்

  • நீண்ட தூர ரயில்களில் சக்கர நாற்காலி நங்கூரமிடலுடன் கூடிய அணுகக்கூடிய ஒரு பெட்டியும், கிராப் பார்கள் பொருத்தப்பட்ட டைப் A கழிப்பறையும் இருக்க வேண்டும்

  • விமான நிலையங்களில், பார்க்கிங் பகுதிகளிலிருந்து செக்-இன் செய்வதற்கு படிக்கட்டு இல்லாத அணுகலையும், ரோல்அவுட் ராம்ப்களுடன் கூடிய ஏரோபிரிட்ஜ்களையும் கொண்டிருக்க வேண்டும்

  • விமானங்களில் சக்கர நாற்காலிக்கு ஏற்ற இருக்கைகள் கிடைப்பதை உறுதிசெய்ய விமான நிறுவனங்கள் உதவி சாதனங்களுக்கான சேமிப்பு இடத்தையும் வழங்க வேண்டும் 

டாக்சிகளுக்கும் இதுபோன்ற சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை பொதுமக்களின் கருத்துகளை பெற்ற பிறகு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. இதனால் மாற்று திறனாளிகளும் இனி எளிதில் பொதுப்போக்குவரத்தை அணுக முடியும் என நம்பப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
தொழில் நுட்பக்கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - உயிர் பிழைத்த 192 பயணிகள்
தொழில் நுட்பக்கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - உயிர் பிழைத்த 192 பயணிகள்
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு! மண்டல காலத்திற்கான முழு ஏற்பாடுகள் தயார்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு! மண்டல காலத்திற்கான முழு ஏற்பாடுகள் தயார்!
ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்! சபரிமலை ஐயப்பன் பிரசாதம் இனி உங்கள் வீடு தேடி வரும்!
ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்! சபரிமலை ஐயப்பன் பிரசாதம் இனி உங்கள் வீடு தேடி வரும்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Embed widget