மேலும் அறிய

Thiruppavai 10: மார்கழி 10ஆம் நாள்... கும்பக்கர்ணன் தூக்கம்... இந்நாளுக்கு ஆண்டாள் இயற்றிய பாடல் இதுதான்!

Margali 10: மார்கழி மாதம் பத்தாவது நாளான இன்று, இந்நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.

மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.

திருப்பாவை ஒன்பதாவது பாடலில், தன்னுடைய தோழி எப்படி தூங்குகிறார் என்பதை ஆண்டாள் காட்சி படுத்தினார். பத்தாவது பாடல் மூலம், தூங்கி கொண்டிருக்கும் தோழியை நகைச்சுவையாக எழுப்புவது போல் காட்சிபடுத்துகிறார் ஆண்டாள்.

பத்தாவது பாடல் விளக்கம்:

காலையில் எழுந்து தவம் புரிந்து சொர்க்கம் செல்வதாக சொன்னாயே, ஆனால் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறாயே, என தூங்கி கொண்டிருக்கும் தோழியை, வெளியில் இருக்கும் தோழிகள் கிண்டலாக பேசுகின்றனர்.

கதவை தான் திறக்கவில்லை வாயையும் திறக்க மாட்டாயா …

கூற்றுக்கு இரையான கும்ப கர்ணன், உனக்கு தூக்கத்தை தந்துட்டு போய்விட்டாரோ, கும்ப கர்ணன் அதிக நேரம் தூங்குவதாக இராமாயணத்தில் அறியலாம். இப்பாடலில், கும்பகர்ணனை எடுத்து காட்டி தோழியை நகைச்சுவையாக எழுப்புகிறார்.

நறுமணம் கமழும் நாராயணனை வணங்கி, அருளை பெற வேண்டாமா...

அழகான சிலை போல் இருக்கும் பெண்ணே, தூக்கத்தில் எழுந்து அப்படியே வந்து விடாதே, நீராட செல்வதற்கு ஏற்ப தயாராகி வா என் கூறுகிறார்.

இப்பாடல் வழியாக பாட்டில் நகைச்சுவையை புகுத்த கூடிய சிரமமான செயல்களை, சிறப்பாக கையாண்டுள்ளார் தமிழ் மகள் என அழைக்கப்பட கூடிய ஆண்டாள்.

திருப்பாவை பத்தாவது பாடல்:

நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள்:

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.

பக்தி இயக்கம்:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிகச் சிறப்பாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தியிருப்பதை காணும்போது ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.

Also Read: Thiruppavai 9: மார்கழி 9ஆம் நாள்... இன்றைக்கான திருப்பாவை பாடல்.. சுகத்தை துறந்தால்தான் வெற்றி...

Also Read:Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
Embed widget