கம்பம் ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா; 2000 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
கம்பம் அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 19.04.2024 ஆம் தேதி சாமி சாட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சமுதாயத்தினர் மண்டகப்படியுடன் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக முதல் நாளில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தல், அங்கபிரதட்சணம் செய்தல், அலகு குத்தி அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், பால்குடம் காவடி எடுத்தல், உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை தொடர்ச்சியாக பக்தர்கள் செலுத்தினர்.
Lok Sabha Election 2024: ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதன்படி, இந்த ஆண்டு இத்திருக் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக சற்றுதலுடன் துவங்கிய நிலையில் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் முதல் ஆயிரம் கண் பானை அழகு குத்தி அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வாக கம்பம் நகரில் உள்ள பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் முளைப்பாரி எடுத்து நேற்றி கடன் செலுத்தும் ஊர்வலமானது நடைபெற்றது . பல்வேறு சமூகத்தின் சார்பில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் ர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .
Aranmanai 4 Review: அரண்மனை 4! ரசிகர்களை பயமுறுத்தியதா? வெறுப்பேற்றியதா? முழு திரை விமர்சனம் இதோ!
அம்மன் கரகங்கள் வைத்தும் வண்ண, வண்ண கலர் காகிதங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட முளைப்பாரிகளை ஆங்காங்கே ஒன்றிணைந்து ஊர்வலமாக கம்பம் அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு கம்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார். அதனை தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்திய முளைப்பாரிகள் அனைத்தும் கம்பத்தில் உள்ள முல்லை பெரியாற்றுக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டது . இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்துச் சென்றனர்.