(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர் தென் திருப்பதி கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்
கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவர் சேவையை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார். இந்நிலையில் ஆலய மண்டபத்தில் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் .
நிகழ்ச்சியை முன்னிட்டு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் சுவாமிகளை தரிசனம் செய்தனர். ஆலயத்தின் பட்டாச்சாரியார் சுவாமிகளுக்கு பட்டாளை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து ஊஞ்சலில் அமரச் செய்தனர். அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஊஞ்சல் உற்சவர் சேவை சிறப்பாக நடைபெற்றது.
கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவர் சேவையை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..