மேலும் அறிய
KKR vs DC : கொல்கத்தாவின் பவுலிங்கில் சிக்கி தவித்த டெல்லி..106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தட்டி சென்ற கொல்கத்தா!
KKR vs DC : இன்றைய ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

KKR vs DC
1/6

ஐ.பி.எல் 2024இன் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
2/6

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
3/6

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் சேர்த்தது. சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்களை குவித்தார்.
4/6

273 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, தொடக்கம் முதலே தடுமாறியது.
5/6

பொறுப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை இழக்கவே, 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டும் எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
6/6

இந்த வெற்றியின் மூலம் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேரியது கொல்கத்தா அணி.
Published at : 04 Apr 2024 12:58 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement