மேலும் அறிய
Rinku Singh : ரிங்கு சிங்கை புகழ்ந்து தள்ளிய நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம்!
Rinku Singh : கிரிக்கெட்டில் கலக்கி வரும் ரிங்கு சிங்கை நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் புகழ்ந்துள்ளார்.

ரிங்கு - பிரண்டன் மெக்கல்லம்
1/6

கொல்கத்தா அணியின் முக்கியமான அதிரடி பேட்ஸ்மேன் என்ற பெயரை பெற்ற ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு பின்னர் ரிங்கு சிங்கே அந்த டைட்டிலுக்கு பொருத்தமான ஆளாக உள்ளார்.
2/6

கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து அணியை வெற்றியடைய வைத்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.
3/6

இவரின் அதிரடி ஆட்டத்தை பார்த்த பிசிசிஐ இவருக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 தொடரில் விளையாட வாய்ப்பளித்தது
4/6

முதல் டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
5/6

இரண்டாவது போட்டியில் களமிறங்கிய ரிங்கு சிங் சர்வதேச போட்டியில் களம் இறங்கியுள்ளோம் என்ற பயமில்லாமல், அதிரடியாக ஆடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங்கிற்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
6/6

தற்போது இவரின் விளையாட்டை பார்த்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் “ ரிங்கு சிங் சர்வதேச அளவில் அறிமுகமாகி விளையாடுவதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் இதற்காக அவர் எடுத்த முயற்சிகளையும் போராட்டத்தையும் நான் பார்த்திருக்கிறேன். சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் அசத்துவதற்கான விளையாட்டை அவர் கொண்டுள்ளார். அவரால் சிறப்பான விஷயங்களை சாதிக்க முடியும்” என்றார்
Published at : 23 Aug 2023 01:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement