மேலும் அறிய
TN Lok Sabha Election 2024 : முதல்வர் ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை.. வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்!
Tamil Nadu Lok Sabha Election 2024 Voting : அனைத்து கட்சியை சார்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு செய்த அரசியல் தலைவர்கள்
1/23

தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்தினார்.
2/23

இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வாக்கினை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
3/23

திண்டிவனத்திலுள்ள மரகதாம்பிகை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில் தர்மபுரி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி வாக்கு செலுத்தினார்
4/23

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வாக்கு பதிவு செய்தார்..
5/23

திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வாக்கு பதிவு செய்தார்..
6/23

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேனி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
7/23

கோவை தெற்கு பகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், கோவையில் வாக்கு பதிவு செய்தார்.
8/23

ஓ. பன்னீர் செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத், சொந்த ஊரான தேனியில் வாக்கு பதிவு செய்தார்.
9/23

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வடிவேல் நகரில் ஓட்டு போட்டார்
10/23

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி சென்னை மைலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், தனது வாக்கினை செலுத்தினர்.
11/23

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினர்
12/23

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்
13/23

சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்
14/23

அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி சிறுமலர் தொடக்கப்பள்ளியில் வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
15/23

திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தனது வாக்கினை செலுத்தினார்.
16/23

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.
17/23

அமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் மதுரை சொக்கிகுளம் பகுதியில் வாக்களித்தார்.
18/23

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், அவரது குடும்பத்துடன் வாக்கு பதிவு செய்தார்.
19/23

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் அவர்களது மகள் வரலட்சுமியுடன் வாக்குப்பதிவு செய்தனர்.
20/23

கரூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி முதல் கட்ட வாக்குப்பதிவில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தனது தாயாருடன் வாக்கு செலுத்தினார்.
21/23

நடிகை மற்றும் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு, கணவர் சுந்தர் சி, மகள்களுடன் சென்று வாக்களித்தார்.
22/23

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது வாக்கினை செலுத்தினார்
23/23

தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தனது வாக்கினை செலுத்தினார்.
Published at : 19 Apr 2024 11:16 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion