RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
RR vs CSK IPL 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலில் பந்துவீசுகிறது.

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணி இன்று முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இன்று போட்டி நடக்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்த போட்டியில் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெய்ஸ்வால், நிதிஷ் ராண, சாம்சன், ரியான் பராக், துருவ் ஜோரல், ஹெட்மயர், ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே களமிறங்கியுள்ளனர்.
சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், விஜய் சங்கர், ஜடேஜா, தோனி, ஜேமி ஓவர்டன், அஸ்வின், நூர் அகமது, பதிரானா, கலீல் அகமது களமிறங்கியுள்ளனர்.
கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இந்த போட்டியில் தீபக் ஹுடா, சாம் கரண் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக விஜய் சங்கர், ஓவர்டன் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால், இன்றைய போட்டியில் தாக்கம் ஏற்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் வெற்றி பெறுமா?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை இதுவரை 2 போட்டியில் ஆடி 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், அவர்கள் முதல் வெற்றிக்காக அவர்கள் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை ஜெய்ஸ்வால், சாம்சன், ராணா, பராக், ஹெட்மயர் அதிரடியாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும். இல்லாவிட்டால் எதிரணிக்கு சாதகமாக அமைந்துவிடும்.
பந்துவீச்சு பலவீனம்:
ராஜஸ்தான் அணியில் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. ஆர்ச்சர் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். துஷார் தேஷ்பாண்டே, சந்தீப்சர்மா தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே சென்னை அணியை வீழ்த்த முடியும்.
சென்னை அணி கடந்த போட்டியில் செய்த தவறுகளை இந்த தவறுகளை சரி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். கெய்க்வாட், ராகுல் திரிபாதி சிறப்பாக ஆட வேண்டும். ரவீந்திரா தனது சிறப்பான ஆட்டத்தை தொடர வேண்டும். வாய்ப்பு கிடைத்துள்ள விஜய் சங்கர் இன்று சிறப்பாக ஆடினால் சென்னை அணியில் வாய்ப்பை தக்க வைக்கலாம்.

