மேலும் அறிய
சப்பாத்தி - சாதம்; உடல் எடையை குறைக்க எது சாப்பிடலாம்? நிபுணர்கள் அட்வைஸ்!
சாதம், சப்பாத்தி இவை இரண்டில் உடல் எடையை குறைக்க எது உதவும் என நிபுணர்கள் சொல்வதை காணலாம்.

உணவு
1/5

சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியுமா அல்லது சாதம் சாப்பிடலாமா என்ற குழப்பம் மக்களிடையே எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சிலர் எடை குறைப்புக்கு சப்பாத்தி பயனுள்ளதாக கருதுகின்றனர், சிலர் சாதம் அவசியம் என்று நினைக்கிறார்கள்.
2/5

சாதம் மற்றும் சப்பாத்தி ஆகிய இரண்டின் ஊட்டச்சத்து அளவும் பெருமளவில் வேறுபடும் என்று கூறுகிறார்.இவ்விரண்டுமே எடை குறைப்பிற்கு உதவும். மேலும், நீங்கள் ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் சப்பாத்தி எடுத்துக் கொண்டால் இரண்டு நாட்கள் சாதம் சாப்பிடுதல் அவசியம் அன்றும் கூறுகிறார் பூணம் துனேஜா. இப்படி சாப்பிடுவதால் தினமும் விதவிதமாக சாப்பிட்டது போலும் ஆகும். ஆரோக்கியமானவர்கள் சாதம், சப்பாத்தி ஆகிய இரண்டினையும் உண்ணலாம். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கு சாப்பிடாமல் பட்டினி கிடப்பது, உடல் எடையை குறைக்காமல் மேற்கொண்டு உடல் நலனை தான் பாதிக்கும்.
3/5

கோதுமையை விட அரிசியில் கலோரி குறைவு. இரண்டு சப்பாத்தியில் இருக்கும் கலோரியை விட 100கிராம் சாதத்தில் இருக்கும் கலோரி குறைவு என்கின்றனர் நிபுணர்கள். சோளம், கேழ்வரகு மற்றும் திணை சப்பாத்தி ஆகியவை உடல் எஅடயை குறைக்க பெருமளவில் உதவும். இவை கிளைசிமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ள உணவு, அதனால் உடம்பில் இன்சுலின் விகிதம் உடனடியாக அதிகமாம கூடி சர்க்கரை அளவை அதிகரிக்காது.
4/5

நார்ச்சத்து கொண்ட உணவை உட்கொள்ளவும். தினமும் சராசரியாக 40 கிராம் நார்ச்சத்து உடலுக்கு அவசியம்.அன்றாடம் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். உப்பு மற்றும் சர்க்கரையின் அளவை உணவில் குறைத்துக் கொள்ளவும். ப்ராசஸ்ட், ரீஃபைண்ட் உணவுகளைத் தவிர்க்கவும். சூரியகாந்தி விதை போன்ற வித்துக்களின் எண்ணெய்களை பயன்படுத்தவும்
5/5

தினமும் உடற்பயிற்சி செய்யவும். வாழ்க்கைமுறையில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவும். பிடித்தவற்றை சாப்பிடலாம். ஆனால், எல்லா சத்துக்கள் இருக்கும் உணவுகளை சாப்பிடவும்.
Published at : 11 Dec 2024 06:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion