மேலும் அறிய

ப்ரோமோ சூப்பர்! நல்லகண்ணு இறுதி மரியாதை செலுத்த வந்த ரஜினியிடம் சினிமா கதை பேசிய பிரேமலதா... நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த ரஜினியிடம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சினிமா பற்றி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

நலலகண்ணுவின் இறுதி அஞ்சலிக்கு வந்த ரஜினியிடன் அண்மையில் கமல் ரஜினி நடித்து வெளியான ப்ரோமோ குறித்து பிரேமலதாவும் அவரது சகோதரர் எல்.கே சுதீஷூம் பேசினர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் ஒரு அரசியல் தலைவரின் இறப்பின்போது கூட சினிமாவைப் பற்றி பேச வேண்டுமா என விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.

நல்லகண்ணு இறுதி ஊர்வலம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரருமான தோழர் நல்லகண்ணு நேற்று வயது மூப்பின் காரணமாக உயிர் துறந்தார். அவருக்கு வயது 101 . சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அரசியல், திரையுலகினர் உள்ளிட்ட பல்துறை சார்ந்த பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்

தமிழ் திரையுலகம் சார்பாக விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தீனா, இயக்குநர் பா.ரஞ்சித் , சிவகுமார், சூர்யா ஆகியோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இப்படியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “ஓமந்தூரார், அறிஞர் அண்ணா, காமராஜர், கக்கன் அவர்களைப் பார்க்கவில்லை. அவர்களை எல்லாரையும் சேர்த்து நல்லகண்ணு அவர்களிடம் பார்த்தேன். ஒரு நல்லவராக நேர்மையானவராக எளிமையாக இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு நல்லகண்ணு ஒரு எடுத்துக்காட்டு. பெரிய ஆத்மா அவர். தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய வீரவணக்கம் என தெரிவித்துள்ளார். நல்லகண்ணுவின் குடுமத்தினருக்கு ஆறுதல் கூறியபோது ரஜினி கண் கலங்கினார். 

சினிமாவைப் பற்றி பேசியதால் சர்ச்சை

இறுதி மரியாதை செலுத்த வந்த ரஜினி அருகில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது சகோதரர் எல்.கே சுதீஷ் அமர்ந்திருந்தனர். அப்போது அண்மையில் வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ குறித்து சுதீஷ் ரஜினியிடம் பேசினார். ப்ரோமோ சூப்பரா இருந்தது என்று சுதீஷ் சொல்ல பிரேமலாவும் நல்லா இருந்தது என்று கூறினார். 'நல்ல இயக்குநர்' என்று ரஜினி  நெல்சனை குறிப்பிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மூத்த அரசியல் தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் சினிமாவைப் பற்றி பேச வேண்டுமா என நெட்டிசன்கள் பலர் விமர்சனம் தெரிவித்துள்ளார்கள்.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget