மேலும் அறிய

ஆஷா திட்டம்: அன்புமணி ராமதாஸ் பாராட்டிய திரைப்படம்! தாய்மார்கள், குழந்தைகளின் உயிரைக் காக்கும் கதை

ஆஷா திட்டத்தை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட படக்குழுவினருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார்.

தான் மத்திய அமைச்சராக இருந்தபொழுது கொண்ட வந்த ஆஷா திட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம் கொண்டாடும் போது, அது சார்ந்த மலரும் நினைவுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றிய போது இந்தியாவில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நான் அறிமுகப்படுத்திய ஆஷா(Accredited Social Health Activist - ASHA)  திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் ஆஷா என்ற மராத்திய திரைப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்த்த போது எனக்கு அதே உணர்வு தான் ஏற்பட்டது.

ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் ஆகும். இது 2005 ஆம் ஆண்டில் நான் அறிமுகப்படுத்திய உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் பயிற்சி பெற்ற சுகாதாரப் பெண் பணியாளர் ஒருவரையாவது நியமிக்க வேண்டும் என்பது தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் அடிப்படை விதி ஆகும். இந்த விதியை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர்கள் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியா முழுவதும் 10 லட்சம் ஆஷாக்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆஷா திட்டம்: அன்புமணி ராமதாஸ் பாராட்டிய திரைப்படம்! தாய்மார்கள், குழந்தைகளின் உயிரைக் காக்கும் கதை

கருவுற்ற பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் ஐயங்களையும், அச்சத்தையும் போக்க வேண்டுமா? அவர்களுக்கு நுண்ணூட்டச் சத்து மற்றும் துப்புரவு தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டுமா? கருவுற்ற பெண்களை குறித்த காலத்தில் மருத்துமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா? பிறந்த குழந்தைகளின் உடல் நலத்தைக் காக்க வேண்டுமா? குறித்த காலத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதை உறுதி செய்ய வேண்டுமா? அனைத்தையும் ஆஷாக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

ஆஷா திட்டம்: அன்புமணி ராமதாஸ் பாராட்டிய திரைப்படம்! தாய்மார்கள், குழந்தைகளின் உயிரைக் காக்கும் கதை

அவர்களின் துடிப்பான பணிகளால் தான் இன்று 100% பிரசவங்களும் மருத்துமனைகளில் நடைபெறுகின்றன. தாய்மார்கள் இறப்பு விகிதம் 60 விழுக்காடும், குழந்தைகள் இறப்பு விகிதம் 80 விழுக்காடும் குறைந்துள்ளன. ஆஷா பணியாளர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு உலக சுகாதார தலைவர்கள் விருதை  உலக சுகாதார நிறுவனம் வழங்கிப் பாராட்டியிருக்கிறது.

இவ்வளவு சிறப்பு மிக்க ஆஷா திட்டத்தை கதைக்களமாக வைத்து ஆஷா திரைப்படத்தை தயாரித்த அதன் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
குண்டுவீச்சு: கூட்டணி தலைவர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட துப்பில்லையா? அன்புமணி கேள்வி
குண்டுவீச்சு: கூட்டணி தலைவர் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட துப்பில்லையா? அன்புமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget