மேலும் அறிய
Post Celebration Surprise : பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் திரை பிரபலங்கள்.. இதுவரை யார் யார் என்னென்ன கொடுத்துள்ளனர்?
படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இயக்குநர்களுக்கு நடிகர்களும் நடிகர்களுக்கு இயக்குநர்களும் பரிசு பரிமாறிக்கொள்வது வழக்கமாகி விட்டது. அந்த வரிசையில் யார் யார் என்ன வழங்கியுள்ளனர் என்பதை காண்போம்.

பிரபலங்களின் பரிசு
1/6

படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இயக்குநர்களுக்கு நடிகர்களும் நடிகர்களுக்கு இயக்குநர்களும் பரிசு பரிமாறிக்கொள்வது வழக்கமாகி விட்டது. அந்த வரிசையில் யார் யார் என்ன வழங்கியுள்ளனர் என்பதை காண்போம்.
2/6

1999 ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வாலி படம் வெளிவந்தது . அந்த பட வெற்றிக்கு பின்னர் அஜித், எஸ்.ஜே.சூர்யாவிற்கு காரை பரிசாக அளித்தார்.
3/6

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராமுக்கு சிவகார்த்திகேயன் பட வெற்றிக்கு பிறகு கார் வழங்கி அவர் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
4/6

விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் கார் வழங்கினார்.
5/6

மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் கார் வழங்கி அவர் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.
6/6

இந்தியன் 2 இயக்குநர் ஷங்கருக்கு, கமல் 8 லட்சம் மதிப்புள்ள கை கடிகாரத்தை வழங்கினார்
Published at : 04 Jul 2023 06:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement