மேலும் அறிய

DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?

DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தீவிரம் அடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.

நெருங்கும் தேர்தல்- தொகுதி பங்கீடு தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. எனவே அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியை பலப்படுத்தும் வகையில் புதிதாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, கொங்கு இளைஞர் பேரவை,மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளது. 

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்

எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட இடங்களை குறைக்க திமுக திட்டமிட்டது. இதனை முன்பே புரிந்து கொண்ட காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி என போர்க்கொடியை தூக்கியது. கூடுதல் தொகுதி தரவில்லையென்றால் தவெகவிற்கு செல்வோம் என ஒரு பக்கம் மிரட்டியது. இதனால் திமுகவிற்கு ஒரு பக்கம் அழுத்தம் ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாலம் இருந்து வந்தது. இதனால் கூட்டணி உடையும் என்ற நிலை வந்த போது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மூலம் காங்கிரஸ் தலைமை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதிகள்

இதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், கடந்த முறையை விட 3 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கி 28 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபாவும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒப்பந்தமும் ஏற்பட்டது. அதேநேரம் திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டும், 10 தொகுதிகளும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த மற்ற கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் தர வேண்டும் என கேட்டு வருகிறது. இதனால் சிபிஎம் உடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

திமுக கூட்டணி கட்சிகள் பிடிவாதம்

இந்தநிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறுகையில் காங்கிரஸ் மற்றும் தேமுதிகவிற்கும் மட்டும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும் நிலையில் எங்களுக்கு மட்டும் குறைவான தொகுதிகளை ஒதுக்குவது நியாயமில்லையென தெரிவித்தார். எனவே கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். எனவே திமுக கூட்டணியில் தற்போது வரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகவிற்கு 4, முஸ்லிம் லீக் மற்றும் மமகவிற்கு 2 தொகுதிகள், கொங்கு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இன்னும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலையானது ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ம.கம்யூனிஸ்ட்டுக்கு 6 தொகுதிகளும், இ.கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைக்கு 6 அல்லது 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டப்பிறகு திமுக சார்பாக போட்டியிடவுள்ள இடங்களுக்கான வேட்பாளர் நேர்காணல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அண்ணா அறிவாலய வட்டார தகவலாக உள்ளது. 

 

 

தலைப்பு செய்திகள்

திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget