மேலும் அறிய

TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!

கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லி சென்றபோது ஆதவ் அர்ஜுனா கைப்பையில் மதுபாட்டில் இருந்தது குறித்து வெளியான தகவலுக்கு தவெக விளக்கம் அளித்துள்ளது.

தவெக தலைவரும், நடிகருமான விஜய் இன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அவர் டெல்லிக்கு இன்று தனி விமானம் மூலமாக புறப்பட்டுச் சென்றார். 

சரக்கு பாட்டில் இருந்ததா?

அவர் சென்னை விமான நிலையத்தில் சிறப்பு வாயில் வாயிலாக தனி விமானத்திற்குச் சென்றார். அவருடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உடன் சென்றார். அப்போது, ஆதவ் அர்ஜுனாவின் கைப்பையில் உயர்ரக மதுபானம் இருந்ததாகவும், இதனால் விஜய் புறப்பட்ட விமானம் அரைமணி நேரம் தாமதமாகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு முன்னதாக, விஜய்யின் கைப்பையில் கத்தரிக்கோல் இருந்ததால் விஜய் புறப்படும் விமானம் அரைமணி நேரம் தாமதமானதாக தகவல் வெளியானது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

தவெக விளக்கம் என்ன?

சிடிஆர் நிர்மல்குமார்  இது முற்றிலும் பொய்யான தகவல். இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. 

வரும் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக-விற்கும், எதிர்க்கட்சியான அதிமுக-விற்கும் விஜய்யின் தவெக கடும் சவால் அளிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கருத்துக்கணிப்பின்படி, 18 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை வைத்துள்ள விஜய் யாருடைய வாக்குகளை பிரிக்கிறாரோ? அவர்கள் படுதோல்வி அடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வலுக்கும் சிபிஐ விசாரணை:

இதனால், தற்போது வரை திரைமறைவில் விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது. அதற்கு சிபிஐ- விசாரணையை ஒரு கருவியாகவும் பயன்படுத்துவதாகவும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தல் சமயம் நெருங்கும் நேரத்தில் விஜய் மீதான சிபிஐ விசாரணை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தேர்தலில் விஜய்யின் வாக்கு சதவீதம் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம், அவரது விவாகரத்து வழக்கு போன்ற விவகாரங்கள் விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளிகளாக மாறியுள்ளது. அதை எவ்வாறு அவர் கடந்து வருவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"செருப்பு அணிந்து சிமெண்ட் சாலையில் நடப்பவர்களுக்கு விவசாயம் புரியாது" - திமுக, காங்கிரஸை விளாசிய தங்கர் பச்சான்.
நாஞ்சில் சம்பத் ஆபாச பேச்சு: முகம் சுழித்த பெண்கள்! – பொதுமேடையில் அநாகரீகத்தின் உச்சம்
நாஞ்சில் சம்பத் ஆபாச பேச்சு: முகம் சுழித்த பெண்கள்! – பொதுமேடையில் அநாகரீகத்தின் உச்சம்
ஸ்டாலின் செய்தது தேசத்துரோகம்.. மன்னிப்பு கேட்பாரா? - அன்புமணி காட்டம்!
ஸ்டாலின் செய்தது தேசத்துரோகம்.. மன்னிப்பு கேட்பாரா? - அன்புமணி காட்டம்!
சிவகங்கையின் கலைகளின் கருவூலம், அழிவுப்பாதையில்? தொல்நடைக் குழு வேதனை !
சிவகங்கையின் கலைகளின் கருவூலம், அழிவுப்பாதையில்? தொல்நடைக் குழு வேதனை !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Valparai Accident: சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்! – வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு
சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்! – வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு
Edappadi Palanisamy: அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? - முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்
அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? - முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்
400 கி.மீட்டர் வரை மைலேஜ்! Simple Ultra E Scooter விலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எவ்ளோ?
400 கி.மீட்டர் வரை மைலேஜ்! Simple Ultra E Scooter விலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எவ்ளோ?
நாஞ்சில் சம்பத் ஆபாச பேச்சு: முகம் சுழித்த பெண்கள்! – பொதுமேடையில் அநாகரீகத்தின் உச்சம்
நாஞ்சில் சம்பத் ஆபாச பேச்சு: முகம் சுழித்த பெண்கள்! – பொதுமேடையில் அநாகரீகத்தின் உச்சம்
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
ஆதரவு அலை அதிகரிச்சாச்சு! காய்கறி மார்க்கெட்டில் களம் இறங்கியதும் வாக்குகள் எல்லாம் ஒரே திசையில் திரும்பியாச்சு
ஆதரவு அலை அதிகரிச்சாச்சு! காய்கறி மார்க்கெட்டில் களம் இறங்கியதும் வாக்குகள் எல்லாம் ஒரே திசையில் திரும்பியாச்சு
ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும் - பிரச்சாரத்தில் அண்ணாமலை கிண்டல்
ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும் - பிரச்சாரத்தில் அண்ணாமலை கிண்டல்
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
Embed widget