மேலும் அறிய

DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?

கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 7 தொகுதிகளில் அவர்களது செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் திமுக-வே இந்த முறை அந்த தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக கூட்டணி பங்கீட்டில் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சர்வே எடுத்த திமுக:

தொகுதி பங்கீட்டில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட வேண்டும்? என்பதையும் திமுக தலைமையே தேர்வு செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள முதன்மையான கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற பட்டியலை காங்கிரஸ் தீவிரமாக தயாரித்து வருகிறது.

7 தொகுதிகளுக்கு நோ:

அதேசமயம், காங்கிரஸ் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகளை திமுக தலைமை ஆய்வு நடத்தியுள்ளது. அதில் ஊட்டி, விருத்தாச்சலம், அறந்தாங்கி, நாங்குநேரி, சிவகாசி, தென்காசி மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகள் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளில் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால், இந்த முறை இதே தொகுதிகளை காங்கிரஸ் திமுக-விடம் கேட்டால் அதற்கு மறுப்பு தெரிவிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதிகளில் நேரடியாக திமுக வேட்பாளர்களையே களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் திமுக-விற்கு அதிமுக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய 3 கட்சிகளும் போட்டியாக களமிறங்குவதால் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் தேர்விலும், தொகுதி ஒதுக்கீட்டிலும் தீவிர கவனம் செலுத்த திமுக முடிவு செய்துள்ளது. 

அதேபோல, காங்கிரஸ் கட்சியினரும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை மட்டுமே களத்தில் நிறுத்தி தங்களது பலத்தை நிரூபிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால், காங்கிரஸ் தரப்பிலும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர். குறைந்தது 28ல் 25 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 

திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகள் ஒதுக்கீடு போன்ற பல்வேறு கோரிக்கைகள் மூலமாக திமுக-விற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. தவெக-வை காரணம் காட்டி திமுக-விற்கு தொடர்ந்து அழுத்தம் தந்த காங்கிரஸ் 28 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா தொகுதி என்ற உடன்பாட்டிற்கு இறுதியில் கூட்டணியில் நீடிக்க ஒப்புக்கொண்டது.

திமுக முடிவு:

காங்கிரஸ் மட்டுமின்றி மற்ற கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்ற தொகுதிகளிலும் அவர்களது செயல்பாடுகளை திமுக தலைமை ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையிலே அந்தந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"விஜய் அடுத்த பிரதமரா?" ஸ்ரீபெரும்புதூரில் சட்டென பதிலளித்த டி.கே. சிவகுமார்! பரபரப்பு பேட்டி!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget