மேலும் அறிய

Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!

நடிகர் பார்த்திபன் அஜித்தை உயர்த்தி விஜய்யை விமர்சித்துப் பேசிய விவகாரத்தில் இரு நடிகர்களின் ரசிகர்களிடம் சண்டையை மூட்டி விடுகிறாரா? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக உலா வந்த விஜய், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தவெக-வைத் தொடங்கினார். அரசியலில் அவர் நுழைந்தது முதலே அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அஜித்தைப் புகழ்ந்த பார்த்திபன்:

சமீபத்தில் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய மனு, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரபல நடிகை ஒருவருடன் விஜய் இணைத்து பேசப்பட்ட நிலையில், நடிகர் பார்த்திபனின் எக்ஸ் பதிவு, அவரது வீடியோ சர்ச்சையை உண்டாக்கியது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபன் அதில் நடிகர் அஜித் புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்தபோது விஜய்யையும், விஜய் ரசிகர்களையும் மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார். அஜித் புகைப்படத்திற்கு அவர் கூறியதாவது, ஏகே 47 என்பது தானியங்கி ரஷ்ய துப்பாக்கி. ஏகே 54 என்பது தானியங்க ரசிகர்களை பயன்படுத்தாத பீரங்கி. 

தேர்தல் ஆணையத்திற்கு போய் வாங்கும் ஒரு விசிலை விட, தேர்ந்த தன் ரசிகர்கள் அடித்து கிழிக்கும் விசில்கள் அது கோடான கோடி. இவ்வாறு அவர் பேசினார். 

விஜய்யை விமர்சித்த பார்த்திபன்:

இதையடுத்து, விஜய்யின் புகைப்படத்திற்கு அவர் தெரிவித்த கருத்து, இவருடைய போட்டோவைப் போட்டால் நீங்க கைதட்டி விசில் அடித்து முடிப்பதற்குள் நான் வெளியில் சென்று ஒரு டீ சாப்பிட்டு வந்துவிடலாம். அவருக்கான வரவேற்பு ரொம்ப பெருசு. ஆனால், அவர் வரவேற்புக்கு அவர் போனால் பரபரப்பு ரொம்ப பெருசு. இவ்வாறு அவர் பேசினார்.

பார்த்திபனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜய் - த்ரிஷா சர்ச்சை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அவரது எக்ஸ் பதிவு சர்ச்சையை உண்டாக்கியது. தற்போது அவர் பேசிய முழு வீடியோவும் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. 

சண்டையை மூட்டி விடுகிறாரா பார்த்திபன்?

விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவருக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அஜித்தின் ரசிகர்களின் ஆதரவைப் பெற ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்கான காய்களை ஒவ்வொரு கட்சிகளும் நகர்த்தி வருகின்றனர். தற்போது பார்த்திபன் விஜய்யை மறைமுகமாக விமர்சித்து நடிகர் அஜித்தை உயர்த்தி பேசியிருப்பதற்கு இரு நடிகர்களின் ரசிகர்கள் இடையே பார்த்திபன் சண்டை மூட்டி விடுகிறாரா? என்ற வாதத்தையும், கேள்வியையும் ரசிகர்கள் இணையத்தில் எழுப்பி வருகின்றனர். 

அஜித் தனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில், அவரது ரசிகர்களின் வாக்குகளைப் பெற தொடர்ந்து ஒவ்வொரு கட்சியினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். திரைப்பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
நடிப்பில் அசத்தினாரா சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன்..லெனின் பாண்டிய திரை விமர்சனம் இதோ
நடிப்பில் அசத்தினாரா சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன்..லெனின் பாண்டிய திரை விமர்சனம் இதோ
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
சாய் அப்யங்கரின் அடுத்த வைரல் டிராக்...'ஊரோட ஒத்த டான்' பாடல் முழு லிரிக்ஸ் இதோ
சாய் அப்யங்கரின் அடுத்த வைரல் டிராக்...'ஊரோட ஒத்த டான்' பாடல் முழு லிரிக்ஸ் இதோ

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Gem Veeramani Case: ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
Mahindra Thar OG Variants: மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Embed widget