மேலும் அறிய

Rishi Sunak : வேலை இல்லையா? நாங்க தருகிறோம்.! தேர்தலில் தோற்ற ரிஷி சுனக்கை கலாய்த்து விளம்பரம்!

பிரிட்டன் வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்து தரும் நிறுவனமான சிவி லைப்ரரி, சுனக்கை கலாய்த்து வைத்து விளம்பரம் செய்துள்ளது.

திங்களன்று, இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து அடுத்த பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார். இதையடுத்து, பிரிட்டன் வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்து தரும் நிறுவனமான சிவி லைப்ரரி, சுனக்கை கலாய்த்து வைத்து விளம்பரம் செய்துள்ளது. 

 

வேலை வாய்ப்பு தளமான சிவி லைப்ரரி, அவர்களின் புதிய விளம்பர பலகைகளில் சுனக்கை கேலி செய்தது.  இங்கிலாந்தின் தெருக்களில் உள்ள மொபைல் விளம்பரப் பலகைகளில் ரிஷி சுனக்கின் புகைப்படம் காணப்பட்டது. அந்த விளம்பர பலகையில், "உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா? அனைவருக்கும் நாங்கள் வேலைகளை வழங்குகிறோம். அதில், உங்களுக்கு ஏற்ற வேலைய தேடுங்க" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

42 வயதான சுனக், தோல்வியடைந்த உடனேயே, தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கன்சர்வேடிவ் கட்சி ஒரே குடும்பம் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன். புதிய பிரதமரான லிஸ் டிரஸின் பின்னால் நாம் இப்போது ஒன்றுபடுகிறோம். அவர் கடினமான காலங்களில் நாட்டை வழிநடத்துகிறார்" என்று பதிவு செய்துள்ளார்.

விளம்பரத்தை விமரிசித்து பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். "இழிவானது! புகைப்படம் யாருடையதாக இருந்தாலும், அது ரிஷி, லிஸ், போரிஸ், டோனி, மார்கரெட் மற்றும் என யாருடையதாக இருந்தாலும் சரி. உங்கள் பிள்ளைக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கவில்லை என்றால், நாங்கள் சிரிப்போமா? 

அவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பதாலேயே, இது சரியா? அவருக்கு/அவளுக்கு கண்பார்வை குறைபாடு இருந்தால், அவரைத் தவிர வேறு யாரையாவது அடையாளம் காட்டினால், அதே கருத்துடன் அவர்களின் முகத்தை விளம்பரத்தில் காண்பிப்பீர்களா? எனக்கு புரியவில்லை!!! பைத்தியக்காரத்தனமான உலகம். அன்புடன் நடந்து கொள்ளுங்கள். எனது கருத்து அரசியல் தொடர்பான ஒன்றும் இல்லை" என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவி லைப்ரரி, ஒரு அரசியல் தலைவரை கேலி செய்து விளம்பரம் வெளியிடுவது இது முதல் முறையல்ல. முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்நிறுவனத்தின் விளம்பர உத்தியால் பாதிக்கப்பட்டுள்ளார். ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், 'இன்று ராஜினாமா செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஏற்ற புதிய வேலையைத் தேடுங்கள்' என விளம்பரம் வெளியிட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 12:29 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Japan's Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
MBBS BDS Application 2025: தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Japan's Fails: நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
நிலாவுல இந்தியா தான் கில்லி; தோல்வி அடைந்த ஜப்பான் - என்ன விஷயம் தெரியுமா.?
MBBS BDS Application 2025: தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
Musk Vs Trump: மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
மஸ்க் வைத்த பெரிய ஆப்பு; ட்ரம்ப்பின் பதவிக்கே சிக்கலா.? யார் அந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்.?
Piyush Chawla Retires: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா..! ஷாக்கில் ரசிகர்கள்!
Piyush Chawla Retires: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா..! ஷாக்கில் ரசிகர்கள்!
Tata EV Discounts: விட்டதை பிடிக்கணும், லட்சத்தில் விலையை குறைத்த டாடா - EV கார்களுக்கு கொட்டும் ஆஃபர்கள்
Tata EV Discounts: விட்டதை பிடிக்கணும், லட்சத்தில் விலையை குறைத்த டாடா - EV கார்களுக்கு கொட்டும் ஆஃபர்கள்
Repo Rate Reduced: கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
கடன் வாங்குவோருக்கு இனிப்பான செய்தி.! ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைப்பு - முழு விவரம்
Embed widget