மேலும் அறிய

Kamal Haasan: திமுக கூட்டணியில் களம் காணும் கமல்.. எதிர்பார்ப்பில் தமிழகம்!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வைச் சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அதிமுகவில் சந்திரசேகர் ஆகியோரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் கவிஞர் சல்மா, வில்சன், சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஒரு இடத்தை மட்டும் மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. 

வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று திமுக சார்பில் கவிஞர் சல்மா, வில்சன், சிவலிங்கம் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இவர்களை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை தலைமை செயலகத்தில் பேரவை கூடுதல் செயலாளரிடம் தனது வேட்புமனுவை கமல்ஹாசன் சமர்ப்பித்தார். பின்னர், முதல்வர் ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சி தலைவர்கள் திருமாவளவன், செல்வப்பெருந்தகை ஆகியோர் இருந்தனர்.

நடிகர் முதல் அரசியல்வாதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். திமுக - அதிமுகவிற்கு மாற்றுக்கட்சியாகவும், மக்களின் நம்பிக்கையை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியே மிஞ்சியது. தமிழ் சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தினாலும், அரசியலுக்கு அவர் கைக்குழந்தை என  விமர்சிக்கப்பட்டது. ஆனால், நான் சினிமாவில் இருக்கும்போதே அரசியல்வாதி தான் என பதிலடி கொடுத்தார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மநீம தனித்துப் போட்டியிட்டது. இதையடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தல்களில் 2.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.

தேர்தல் தோல்வி

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி 51,481 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றியை தவறவிட்டார்.

திமுக கூட்டணி

2021 தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவை எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வந்த கமல்ஹாசன் திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். 2024 மக்களவை தேர்தலில் மநீம திமுகவுடன் கூட்டணியில் இருப்பதையும் கமல்ஹாசன் அறிவித்தார். பின்பு காங்கிரஸ் கட்தி தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என பேசியது கடும் சர்ச்சையை சந்தித்தது. 

மன்னிப்பு கேட்காத கமல்

இதற்கு கன்னட அமைப்பினர் மற்றும் பெங்களூரு உயர்நீதிமன்றம் கமலை மன்னிப்பு கேட்க கெடு விதித்தது. எதற்கும் அசைவு கொடுக்காத கமல்ஹாசன் தமிழ்தான் என் உயிர் என நிரூபித்தார். கடைசி வரை தமிழும் தமிழ் மக்களும் தான் எனக்கு உறுதுணையாக இருந்தனர் என பெருமிதம் அடைந்தார். கூட்டணி கட்சிகளின் ஆதரவும் பெருகியுள்ள நிலையில், வரும் காலங்களில் எம்.பி. ஆக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்து வரும் கமல்ஹாசனின் கன்னிப்பேச்சை மாநிலங்களவையில் காண 8 கோடி தமிழ் மக்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget