திருமணத்திற்கு முன்பு வரை அப்படி இருந்தோம்....திடீரென வந்த தீபிகா படூகோனின் முன்னாள் காதலன்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் முன்னாள் காதலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கும் தீபிகாவுடனான காதல் உறவைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்

தீபிகா படுகோனின் எக்ஸ்
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். ஒரு மாடலாக தனது கரியரைத் தொடங்கி இன்று அதிக வருமானம் ஈட்டுல் நடிகைகளில் ஒருவர். இவரது கணவர் ரன்வீர் சிங் மற்றொரு பிரபல நடிகர். தீபிகா படுகோனின் முன்னாள் காதலன் முஜ்ஜமில் இப்ராஹிம் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
இந்த நிகழ்வில் தீபிகா படுகோனும் தானும் இரண்டு ஆண்டுகள் காதலித்து பின் பிரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தீபிகா படுகோன் மாடலிங் கனவோடு மும்பை சென்றுள்ளார். அப்போது இப்ராஹிம் ஒரு சில பாடல் வீடியோக்களில் நடித்து பிரபலமாகி வந்தார். " மும்பையில் வந்து தீபிகா சந்தித்த முதல் நபர் நான் தான். அவர் பிரகாஷ் படூகோனின் மகள். அதனால் அவர் ரொம்பவும் தன் நம்பிக்கை உள்ள ஒரு நபராக இருந்தார் . தீபிகா தான் என்னை டேட் கூப்பிட்டார். நாங்கள் இரண்டு வருடம் காதலித்தோம். எங்களிடம் பெரிதாக பணம் இருக்காது. ரிக்ஷாவில் டேட் செல்வோம்." என்றார்
தீபிகாவுடன் பிரிவு பற்றி இப்ராஹிம்
தீபிகா காதலை தொடங்கியிருந்தாலும் இரண்டு வருடம் கழித்து இந்த காதலை முடித்துக் கொள்ள முடிவெடுத்தது முஜ்ஜமில் இப்ராஹிம் தான். " அன்று நான் ஒரு பெரிய ஸ்டார். இன்று தீபிகா ஒரு சூப்பர்ஸ்டார். எல்லாருக்கு அவரை தெரியும். யாருக்கும் என்னை தெரியாது. நான் தீபிகாவின் பெரிய ரசிகன். அவரது படங்களைப் பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு அழகான பெண். ஆனால் நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து இல்லை என்பதுதான் நிதர்சனம். ரன்வீரை திருமணம் செய்வது வரை நாங்கள் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வோம். எங்களது சாதனைகளுக்காக பாராட்டிக் கொள்வோம். சொல்லப்போனால் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம். அதன் பின் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. "





















