மேலும் அறிய

Tata EV Discounts: விட்டதை பிடிக்கணும், லட்சத்தில் விலையை குறைத்த டாடா - EV கார்களுக்கு கொட்டும் ஆஃபர்கள்

Tata EV Cars Discounts: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மின்சார கார் மாடல்களுக்கு ஜுன் மாதத்தில் ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது.

Tata EV Car Discounts: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது குறிப்பிட்ட மின்சார கார் மாடல்களுக்கு, ரூ.1 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது.

விட்டதை பிடிக்க துடிக்கும் டாடா:

இந்திய மின்சார கார் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கை வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்த டாடா நிறுவனம், கடந்த மாதம் மட்டும் 35.4 சதவிகித சரிவை கண்டுள்ளது. கடந்த ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மே மாத விற்பனை 19 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநேரம், முந்தைய மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் விற்பனை 8 சதவிகிதம் குறைந்துள்ளது. நிறுவனத்தின் பிரதான மாடல்களான நெக்ஸான், டியாகோ மற்றும் பஞ்ச் மின்சார கார்கள் பிரபலமாக இருந்தாலும், புதிய போட்டியாளர்கள் காரணமாக விற்பனையில் சறுக்கலை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான், டாடா நிறுவனம் தனது பல மின்சார கார் மாடல்களுக்கு ஜுன் மாதம் முழுவதும் சலுகைகளை அறிவித்துள்ளது.

மின்சார கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கர்வ், நெக்ஸான், பஞ்ச் மற்றும் டியாகோ ஆகிய கார் மாடல்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த நான்கு கார்களின் யூனிட்களுக்கும் க்ரீன் போனஸ், எக்சேஞ்ச்/ஸ்க்ரேப்பேஜ் போனஸ் வழங்கப்படும். அதேநேரம், டியாகோ மற்றும் பஞ்ச் கார்களில் மட்டுமே நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களுக்கும் சலுகைகள் வழங்கப்படும். 2024ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட டியாகோ மற்றும் பஞ்ச் கார் மாடல்களுக்கு கூடுதலாக க்ரீன் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஆனது நகரம் மற்றும் கையிருப்பை பொறுத்து மாறுபடும்.

டாடா கர்வ் EV

கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கர்வ்வின் அனைத்து யூனிட்களுக்கும் ரூ.70 ஆயிரம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் க்ரீன் போனஸ் ஆக ரூ.50 ஆயிரமும், எக்சேஞ்ச்/ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ஆக ரூ.20 ஆயிரமும் அடங்கும். மஹிந்திராவின் BE 6  மற்றும் ஹுண்டாய் கிரேட்டாவின் மின்சார கார்களுக்கு போட்டியான இந்த காரின் விலை ரூ.17.49 லட்சத்திலிருந்து ரூ.22.24 லட்சம் வரை நீள்கிறது.  இதில் இடம்பெற்றுள்ள 45 KWh மற்றும் 55 KWh பேட்டரி ஆப்ஷன்கள் முறையே, 430 மற்றும் 502 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாடா நெக்ஸான் EV

இந்த பட்டியலில் மிகவும் குறைந்தபட்ச தள்ளுபடியாக, கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட நெக்ஸானின் யூனிட்களுக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்ட்களுக்கும் இதே நிலையே தொடர்கிறது. இதில் க்ரீன் போனஸ் மற்றும் எக்சேஞ்ச்/ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ஆகியவை தலா ரூ.20 ஆயிரமும் அடங்கும். இந்த காரின் விலை ரூ.12.49 லட்சம் முதல் ரூ.17.19 லட்சம் வரை நீள்கிறது. எம்ஜி விண்ட்சர் மற்றும் மஹிந்திராவின் XUV400 ஆகிய கார் மாடல்களுடன் இந்த கார் போட்டியிடுகிறது. நெக்ஸானில் உள்ள 30 KWh மற்றும் 45 KWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், முறையே 275 மற்றும் 489 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 KWh வேரியண்டானது கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார்களை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாடா டியாகோ EV

டாடா நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை மின்சார காரான டியாகோவிற்கு, இந்த மாதம் அதிகபட்ச சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட டியாகோவின் எண்ட்ரி லெவல் XE ட்ரிம்மிற்கு ரூ.55 ஆயிரமும், டாப் எண்ட் வேரியண்ட்களான XZ+ மற்றும் XZ+ Tech Lux ACFC வேரியண்ட்களுக்கு 70 ஆயிரம் ரூபாயும் சலுகை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக மிட்-ஸ்பெக் வேரியண்டான XT LR-க்கு ரூ.1 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட டியாகோவின் யூனிட்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 

இந்த காரின் விலை ரூ.7.99 லட்சத்திலிருந்து ரூ.11.14 லட்சம் வரை நீள்கிறது. எம்ஜி கோமெட் கார் மாடலுடன் போட்டியிடும் டியாகோ, 19.2 KWh மற்றும் 24KWh பேட்டரி பேக்குகளை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே 221 மற்றும் 275 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் EV

டாடா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் மாடலான பஞ்சின், கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்+ வேரியண்ட்களுக்கு ரூ.45 ஆயிரம் வரையிலும், மற்ற வேரியண்ட்களுக்கு ரூ.70 ஆயிரம் ரூபாய் வரையிலும் சலுகை வழங்கப்படுகிறது. டியாகோவை போன்றே, 2025ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பஞ்சின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.40 ஆயிரம் பலன்கள் அளிக்க்கப்படுகின்றன. பஞ்ச் காரின் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.14.44 லட்சம் வரை நீள்கிறது. சிட்ரோயன் இசி3 கார் மாடலுடன் போட்டியிடும் பஞ்ச் காரில், 25 KWh மற்றும் 35 KWh பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget