Pandian Stores 2: அரசியை ஒழிச்சு கட்ட குமரவேல் செய்த பலே சம்பவம்? என்ன ஆச்சு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட் !
பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலின் இன்றைய 499ஆவது எபிசோடில், அரசியை ஒழிச்சு கட்ட குமரவேல் செய்த சம்பவம் பற்றி பார்க்கலாம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது குமாரவேல் மற்றும் அரசியின் திருமணம் தான். இது போன்று பல திருமணங்கள் சினிமாவில் நடந்திருந்தாலும், சீரியல்களில் இப்படியொரு சம்பவம் இப்போது நடந்திருக்கிறது. தன்னையும், தனது குடும்பத்தையும் பழி வாங்க துடிக்கும் குமாரவேலுவை எப்படி பழி தீர்ப்பது என்று யோசித்த அரசிக்கு இந்த சம்பவம் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. பாண்டியன் ஸ்டோர்ர்ஸ் 2 சீரியலில் இன்றைய 499ஆவது எபிசோடில் அரசியை எப்படியாவது வீட்டை விட்டு துரத்திட வேண்டும் என்று திட்டம் போட்ட குமாரவேலுவிற்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசியை ஹோட்டலுக்கு கூட்டி செல்கிறேன் என்ற பெயரில் அடர்ந்த ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்குள் கூட்டி சென்று யாருமே இல்லாத இடத்தில் காரிலிருந்து இறக்கிவிட்டுவிட்டு வந்துள்ளார். அரசியும் பயந்து நடுங்குகிறார். குமாரவேலுவோ தனது நண்பர்களுடன் இணைந்து குடித்து மகிழ்ச்சியாக ஆட்டம் போடுகிறார்.

இறுதியாக குமாரவேல் வீட்டிற்கு தனியாக வந்துள்ளார். அரசியுடன் வெளியில் சென்ற நீ இப்போது ஏன் தனியாக வந்தாய் என்று வீட்டில் உள்ள எல்லோரும் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். கடைசியில் அரசி தனியாக நடந்து வீட்டிற்கு வந்து சேருகிறார். அவர் வீட்டிற்கு வரும் போது கதிர் மற்றும் செந்தில் இருவரும் அவர்களது வீட்டிற்கு வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசியை பார்த்ததும் ரொம்பவே ஷாக்காகிவிட்டார் குமாரவேல். அரசியும் வீட்டில் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. தனது ஃப்ரண்டை பார்த்ததாகவும், அதனால் காரிலிருந்து இறங்கி பேசிட்டு வந்ததாகவும் வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறி சமாளிக்கிறார். அதோடு இவர் என்னை எதாவது பண்ணி விடுவாரோ என்று பயந்துவிட்டீர்களா? இவரால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அரசி கர்வமாக திமிராக பேசுகிறார். இதையெல்லாம் குமாரவேல் அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படியே இன்றைய 499ஆவது எபிசோடும் முடிந்தது.
இனி நாளைய 500ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். 500ஆவது எபிசோடு என்பதால் சிறப்பு காட்சிகள் ஏதாவது இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியில்லை என்றால் விளம்பரமே இல்லாமல் கூட ஒளிபரப்பு செய்யப்படலாம். என்ன நடக்கும் என்பதை நாளை வரை காத்திருந்து பார்க்கலாம்.





















