Akhil Akkineni Wedding: நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்.. வயது வித்தியாசம் இவ்வளவா?
Akhil Akkineni Zainab Ravdjee Age Gap: நாகர்ஜூனா - அமலா தம்பதி மகன் அகில் அக்கினேனி தனது நீண்ட நாள் காதலியான ஜைனப் ரவ்ஜீ என்பவரை இன்றும் திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர், கிங், வயது ஆனாலும் அழகு குறையாத சிரிப்பழகன் என வருணிக்கப்படுபவர் நாகர்ஜூனா. நடிகை அமலா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அகில் என்ற மகன் இருக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நாக சைதன்யா. அண்மையில் நாக சைதன்யா - சோபி துலிபாலா திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ஜீ என்பவரை இன்று திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
காதல் ஜோடி
நாகர்ஜூனா - அமலா தம்பதியின் மகன் அகில் தெலுங்கில் ஹலோ, மிஸ்டர் மஞ்சு, மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் இளம் ஹீரோவாகவும் சாக்லெட் பாயாக வலம் வருகிறார். நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி பாராட்டை பெற்றுள்ளார். இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலியான ஜைனப் ரவ்ஜீ என்பவரை அகில் அக்கினேனி இன்று கரம்பிடித்துள்ளார். இந்த காதல் ஜோடிக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையை சேர்ந்த ஜைனப் ரவ்ஜீ எங்கள் குடும்பத்துக்கு வரவேற்பதிலும் மகிழ்ச்சி அடைகிறோம் என அண்மையில் நாகர்ஜூனா தெரிவித்திருந்தார். இருவரது நிச்சயதார்த்த புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆனது.
திருமணம்
இன்று காலை 6 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜூனாவின் வீட்டில் அகில் அக்கினேனி -ஜைனப் ரவ்ஜி திருமணம் பாரம்பரிய முறைப்படி எளிமையாக நடைபெற்றது. இதில், இருவீட்டாரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சிலர் மட்டுமே இதில் கலந்துகாெண்டனர். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, அவரது மனைவி நடிகை சோபி துலிபாலா, நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, அவரது மகன் ராம் சரண் உள்ளிட்டோர் விடியற்காலையிலேயே நாகார்ஜுனா வீட்டிற்குச் சென்றுள்ளனர். வரும் 8ஆம் தேதி நாகர்ஜூனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூர்னா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலுக்கு வயது இல்லை
கடந்த 3 வருடங்களாக அகில், ஜைனப்பும் காதலித்து வந்தனர். கடந்தாண்டு இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. அகிலை விட ஜைனப், ஒன்பது வருடங்கள் மூத்தவர் என்ற தகவல் வெளியாகி சர்ச்சையை
ஏற்படுத்தியது. அகிலுக்கு 30 வயது ஜைனப்பிற்கு 39 வயது எனக் கூறப்படுகிறது. காதலுக்கு கண்கள் இல்லை என்பது போல் வயது முக்கியம் இல்லை. வயது நம்பர் தான். இருவரது மனங்களை பாருங்கள். இருவரும் நல்ல ஜோடி என நெட்டிசன்கள் அகில் - ஜைனப் ஜோடிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.





















