Watch Video | போப்பாண்டவரின் தொப்பியையே தூக்கிய குட்டிச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ
10 வயது சிறுவன் ஒருவர் வாடிகனில் போப்பின் தொப்பியைத் தூக்க முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
10 வயது சிறுவன் ஒருவர் வாடிகனில் போப்பின் தொப்பியைத் தூக்க முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாடிகனின் பால் VI அரங்கத்தில் பெரிய கூட்டத்திடம் சொற்பொழிவாற்றுவதற்காக போப் ஆண்டவர் அமர்ந்திருந்தார். அப்போது மேடையில் ஏறிய சிறுவன் போப்பின் கைகளைப் பிடித்து மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறான். போப்பும் அந்த சிறுவனிடம் எதையோ பேசுகிறார். அப்போது போப் அமர்ந்துள்ள இருக்கையின் பின்புறமாகச் சென்று போப் அணிந்துள்ள தொப்பியை பார்க்கிறான். மீண்டும் நடக்கும் சிறுவன் மேடையில் மைக்கில் பேசிக்கொண்டிருந்தவரிடம் சென்று, அவரின் கைகளைப் பிடித்து போப்பிடம் சென்று போப்பின் தொப்பியைக் கேட்கிறான். போப்பும் சிரிக்கிறார். மீண்டும் அருகில் இருக்கும் ஒவ்வொருவரிடமுமே போப்பின் தொப்பியைக் காட்டி கேட்கிறான்.
இறுதியில் சிறுவனுக்கு போப் அணிந்ததைப் போன்றே தொப்பி வழங்கப்பட்டதும் மேடையிலிருந்து இறங்கி செல்கிறான். அப்போது ஆயிரக்கணக்கானவர்கள் சிறுவனுக்காக கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். கியூட்டாக அந்த சிறுவன் செய்யும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள்:
A boy stole the show at Pope Francis' general audience at the Vatican. The boy, who the pope later said had a medical ‘limitation,’ walked on and off the stage freely, returning to the center several times as the pope continued his address pic.twitter.com/uUQHdgRir5
— Reuters (@Reuters) October 20, 2021
கத்தோலிக்க போப் ஆண்டவர் அணிந்திருக்கும் வெள்ளை நிறத்தொப்பி சுக்கெட்டோ (zucchetto) என அழைக்கப்படுகிறது. அதன் மீது ஆர்வம் கொண்டு அதனைக் கேட்கும் சிறுவனின் அப்பாவித்தனம் அரங்கையே சிரிப்பலையில் மூழ்க செய்தது. இதுகுறித்து பின்னர் பேசிய போப் பிரான்சிஸ் சிறுவனுக்கு மருத்துவக் குறைபாடு இருப்பதாக கூறினார்.
மேலும், சிறுவனின் செயல்கள் இதயத்திலிருந்து நேராக வந்ததால் அவர் கற்றுத் தந்த பாடத்திற்கு நன்றி என்று போப் கூறினார். குழந்தை வளர வளர இறைவன் அவருக்கு உதவுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக சிறுவன் மேடையில் ஏறும்போது போப்பின் பாதுகாப்பு காவலர்களும் அவரைத் தடுக்கவில்லை. சிறுவனால் எந்த பாதிப்பும் இருக்காது என உணர்ந்ததால் அவரைத் தடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்