(Source: ECI/ABP News/ABP Majha)
Gotabaya Rajapaksa: இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச விமானத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் வைரல்
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச மாலத்தீவிலிருந்து, சிங்கப்பூருக்கு விமானத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது
சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார் அதிபர் கோத்தபய ராஜபக்ச
மாலத்தீவில் இருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில் சிங்கப்பூருக்கு தப்பித்துச் செல்லும் வீடியோ, தற்போது வெளியாகி உள்ளது.
சிங்கப்பூருக்கு தப்பிச் செல்லும் காட்சிகள் :
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச மாலத்தீவிலிருந்து, சிங்கப்பூருக்கு விமானத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மாலத்தீவில் இருந்து சவுதி அரேபியா ஏர்லைன்ஸில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மாலத்தீவிலிருந்து, சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிங்கப்பூருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புறப்பட்டுள்ளார்.</p
👀 The world is watching and tracking…
— Dasuni Athauda (@AthaudaDasuni) July 14, 2022
Nearly 4000 people currently tracking flight SV788 believed to be carrying Sri Lankan President @GotabayaR as he is believed to be en route to #Singapore from #Maldives after fleeing from #SriLanka #lka #SriLankaProtests #SriLankaCrisis https://t.co/Lt4rmyooZ7 pic.twitter.com/waY9NXGdGu
>
சிங்கப்பூருக்கு சென்றவுடன் தனது பதவி விலகலை கோட்டபய ராஜபக்ச அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது மனைவி மற்றும் கொழும்பில் இருந்து அவருடன் விமானத்தில் சென்ற இரண்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் சிங்கப்பூர் செல்கிறார். மாலத்தீவு பாதுகாப்புப் படையின், சிறப்பு படையினரால் கோட்டபய, விமான நிலையம் வரை அழைத்துச் செல்லப்பட்டார். அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
பதவி விலகல்:
விமானத்தில் கோட்டபய ராஜபக்ச இருக்கும் காட்சியில், அவருடன் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இலங்கை மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில், இவர்கள், அந்த கஷ்டத்தை சிறிதும் உணராது, மகழ்ச்சியாக உள்ளனர் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில், கோட்டபய ராஜபக்ச, இன்று பதவி விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.