![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் - ஏன் தெரியுமா?
கலைஞர் நூற்றாண்டு வினாடி வினா இறுதிப்போட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
![தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் - ஏன் தெரியுமா? Chiefminister MK Stalin praises kanimozhi at Kalaingnar 100 years event in chennai தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் - ஏன் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/23/ea16e238fa7bb788bdb88d19547a18911732364495796333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாசத்தை பொழியும்போது கனிமொழியாகவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி நாடாளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் தங்கை கனிமொழி இருக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு வினாடி வினா இறுதிப்போட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “கலைஞர் 100 வினாவி வினா போட்டியை தமிழகம் முழுவதும் நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. தமிழ்நாடு முழுவதும் போட்டிக்கு ஏற்பாடு செய்த கனிமொழிக்கு பாராட்டுகள். பாசத்தை கனிமொழியாகவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி நாடாளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார்.
தமிழ்நாட்டின் பலகோடி மக்களுக்கு கலைஞர் வாழ்க்கை கொடுத்துள்ளார். அதனால்தான் அவர் இன்னும் நம்முடன் இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் ஆயிரம் ஆண்டுகள் அவரை போற்றுவார்கள். அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களை இயற்றிய கலைஞரை ஆளுமையாக அனைவரும் ஒப்புக்கொள்வர்.
14 வருடங்கள் திராவிட இயக்க வரலாறு இளம் தலைமுறையினர் நெஞ்சில் விதைக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் பேரை திராவிட இயக்க வரலாற்றை படிக்க வைத்துள்ளோம். இதன் மூலம் இந்த போட்டியின் நோக்கம் நிறைவேறியுள்ளது. பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்க வேண்டும். வரலாற்றை மக்களிடம் சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "#கலைஞர்100 வினாடிவினா போட்டி நடத்தி, 2 இலட்சம் பேரைத் திராவிட இயக்கம் குறித்துப் படிக்க வைத்து, புதிய கருத்தியல் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் தங்கை
அவர்களுக்கும்
#கலைஞர்100 வினாடிவினா போட்டி நடத்தி, 2 இலட்சம் பேரைத் திராவிட இயக்கம் குறித்துப் படிக்க வைத்து, புதிய கருத்தியல் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் தங்கை @KanimozhiDMK அவர்களுக்கும் @DMKWomensWing உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) November 23, 2024
பேசிப் பேசி, எழுதி எழுதி எழுந்தோம்! தமிழினத்தை… pic.twitter.com/b21MvxBtDR
உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துகள்! பேசிப் பேசி, எழுதி எழுதி எழுந்தோம்! தமிழினத்தை எழுச்சி பெற வைத்தோம்! இதுபோன்ற போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி, திராவிட கருத்தியல் சிந்தனை கொண்ட இளைய தலைமுறையை உருவாக்கிடுவோம்!" எனத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)